கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரங்கனை நோசாமி ஒகுஹராவை வீழ்த்தி பி.வி விந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரங்கனை பி.வி சிந்து, ஜப்பான் வீரங்கனை நோசோமி ஒகுஹராவுடன் இன்று மோதினார். ரியோ ஒலிம்பிக்கில், நோசாமி ஒகுஹராவை பி.வி சிந்து எதிர்கொண்டு வெற்றிக்கொண்டார். இதனையடுத்து, ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சென்ற பி.வி சிந்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்தந்து வரலாறு படைத்தார். ஆனாலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உலக பாட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி சிந்துவும், நோசோமி ஒகுஹராவும் மீண்டும் சந்திக்க நேரிட்டது. அப்போட்டியில், ஒலிம்பிக்கில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பி.வி சிந்துவை வீழ்த்தினார் நோசோமி ஒகுஹரா.
பி.வி சிந்து தரவரிசையில் 4-வது இடத்திலும் , ஒகுஹரா 9-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த நிலையில், கொரிய ஓபன் பேட்மிண்டனில் பி.வி சிந்துவும், நோசோமி ஒகுஹராவும் இன்று மீண்டும் நேருக்கு நேர் மோதினர். இப்போட்டியில் பி.வி சிந்து வெல்லும் பட்சத்தில், கொரிய ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனால், இப்போட்டி இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்போட்டி தொடங்கிது முதலே போட்டியில், இரு விராங்கனைகளும் ஒருவக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில் விளையாடி வந்தனர். விறுவிறுப்புடன் இருந்த முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் பி.வி சிந்து கைப்பற்றினார்.
முதல் செட்டை இழந்ததால், இரண்டாவது செட்டை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று விளையாடிய ஒகுஹரா, பி.வி சிந்துவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இரண்டாவது செட்டில் 06-11 என்ற முன்னிலையில் இருந்தார் ஒகுஹரா. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஒகுஹரா 11-21 என்ற கணக்கில் 2-வது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டை யார் கைப்பற்றப்போவது என்ற நிலையில், முதலில் இருவரும் மாறி மாறி சமமாக புள்கிகள் எடுக்க, பின்னர் பி.வி சிந்துவின் கை ஓங்கியது. இதனால், 05-11 என்ற கணக்கில் பி.வி சிந்து முன்னிலையில் இருந்தார். எனினும் அடுத்து அதிரடி காட்டிய ஒகுஹரா, 13-15 என்ற நிலைக்கு வந்து விட்டார். இதனால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில் 18-21 என்ற கணக்கிர்ல 3-வது செட்டை கைப்பற்றினார் பி.வி சிந்து. இதன் மூலம் 20-22, 21-11, 18-21 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பி.வி சிந்து, கொரிய ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.