India vs West Indies Cricket: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக புனேவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், புனேவில் இருந்து, இன்று போட்டி நடக்கும் மும்பைக்கு பேருந்தில் வந்த வீரர்களிடையே ஒருவித மௌனம் நிலவியது. கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரிடமும் என்ஜாய்மென்ட் மிஸ்ஸிங்.
வழக்கமாக மேட்சில் தோல்வி அடைந்தாலும், இந்திய வீரர்கள் அதைப்பற்றி கவலைப்பட்டு மெண்டல் டிஸ்டர்ப் ஆக மாட்டார்கள். அவர்களது பேலன்சிங் அவ்வளவு அபாரமாக இருக்கும். நிகழ் அணிகளில் டாப் மெச்சூர்ட் கொண்ட அணி என்றால் அது இந்தியா தான்.
ஆனால், என்னவோ தெரியவில்லை, வெஸ்ட் இண்டீஸ் உடனான தோல்விக்கு பிறகு, அந்த பேலன்சிங் கொஞ்சம் மிஸ்ஸிங் ஆனது போலவே தெரிந்தது.
இந்நிலையில், இன்று மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 2006ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஸ்டேடியத்தில் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரவுண்ட் சிறியதாக இருக்கும். இதனால், இன்று பல சிக்ஸர்களை காண நேரிடலாம். அதுவே இந்தியாவுக்கு ஆபத்தாகவும் போகலாம்.
இரவு 08: 30 – வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார்.
ரன்கள் அடிப்படையில் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி:
257 vs பெர்முடா, POS 2007
256 vs ஹாங்காங், கராச்சி, 2008
224 vs வெஸ்ட் இண்டீஸ், மும்பை பிஎஸ், 2018 *
200 vs வங்கதேசம், டாக்கா, 2003
190 vs நியூசிலாந்து, விசாகப்பட்டினம், 2016
இரவு 08:15 – 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து இந்திய பவுலர்களை ரொம்பவே நோகடித்து வருகிறார் கெமார் ரோச். ஒரு விக்கெட்டுக்காக ஒரு மணி நேரமாக போராடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி.
இரவு 07:45 – வெஸ்ட் இண்டீஸ் எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்தியா மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
மாலை 06:45 – 5 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் மிக மோசமான நிலையில் உள்ளது. ஹெட்மயர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். கலீல் அஹ்மது 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மாலை 06:25 – முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஆட்டம் காண்பித்த ஷாய் ஹோப் 0 ரன்னில் ரன் அவுட்டானார். இது இந்தியாவின்
மாலை 06:15 – வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தொடங்கியது. முதல் விக்கெட்டாக ஹேம்ராஜை 14 ரன்னில் அவுட்டாக்கினார் புவனேஷ் குமார்.
மாலை 05:25 – 2013லிருந்து இந்தியாவுக்காக ஒரு மேட்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் ரோஹித் மட்டுமே.
மாலை 05:20 – இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.
மாலை 5:10 – 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு நான்காவது வீரராக களமிறங்கி சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்.
104* மனீஷ் பாண்டே v ஆஸ்திரேலியா, சிட்னி, 2016
150 யுவராஜ் சிங் v இங்கிலாந்து, கட்டாக், 2017
100 அம்பதி ராயுடு v வெஸ்ட் இண்டீஸ், மும்பை, 2018
மாலை 05:05 – அம்பதி ராயுடு தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
மாலை 04:45 – இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 20 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.
மாலை 04:00 – 21 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா.
குறைந்த இன்னிங்ஸில் 21வது ஒருநாள் சதம் அடித்த வீரர்களின் பட்டியல்:
116 – ஆம்லா
138 – விராட் கோலி
183 – ஏபி டி வில்லியர்ஸ்
186 – ரோஹித் ஷர்மா
200 – சச்சின் டெண்டுல்கர்
217 – சவுரவ் கங்குலி
பிற்பகல் 03:20 – விராட் கோலி 16 ரன்னில் அவுட்டானார். இந்த ஆண்டில் கோலியின் மிகக் குறைந்த ஒருநாள் ஸ்கோர் இதுவேயாகும்.
112
46*
160*
75
36
129*
75
45
71
140
157*
107
16
பிற்பகல் 03:00 – விராட் கோலி 16 ரன்னில் கெமார் ரோச் பந்தில் கேட்சானார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதமடித்த கோலி, இன்றைய போட்டியிலும் சதமடித்து இருந்தால், தொடர்ந்து 4 ஒருநாள் போட்டியில் சதமடித்த குமார் சங்கக்காராவின் சாதனையை சமன் செய்ய தவறினார்.
அதிக ரன்கள் அடித்த இந்திய தொடக்க பார்ட்னர்ஷிப்
6609 டெண்டுல்கர் – கங்குலி
3920 ரோஹித் – தவான்
3919 டெண்டுல்கர் – சேவாக்
1870 கம்பீர் -சேவாக்
1680 சுனில் கவாஸ்கர் – ஸ்ரீகாந்த்
பிற்பகல் 01:20 – இன்று போட்டி நடக்கும் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில், நாம் முன்பே சொன்னது போல 2006க்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக, 1993ம் ஆண்டு இதே ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அதில் எதிரணி இந்தியா கிடையாது. தென்னாப்பிரிக்கா. அப்போட்டியில், ஜாண்டி ரோட்ஸ் 5 கேட்சுகள் பிடித்ததற்காக ‘ஆட்ட நாயகன்’ விருது வென்றார். ஒருநாள் போட்டியில் ஒரு ஃபீல்டரின் அதிகபட்ச கேட்ச் இதுவேயாகும்.