லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் சிறப்புக் குழுவில் கங்குலிக்கு இடம்!

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் சிறப்புக்குழுவில் சவுரவ் கங்குலி இடம்பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, பிசிசிஐ-யில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.இந்த லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, பிசிசிஐ மூத்த நிர்வாகியான ராஜிவ் சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலிக்கு இடம் பெற்றுள்ளார்.

இதேபோல, டிசி மேத்யூ(கேரள கிரிக்கெட் சங்கம்) நபா பட்டச்சர்ஜி( வடகிழக்கு பிரநிதிதி) ஜெய் ஷா(குஜராத் கிரிக்கெட் சங்கம்) பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி, மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆலோனைக் குழுவிலும் கங்குலி ஏற்கெனவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோரும் உள்ளனர்.

×Close
×Close