துரோணாச்சாரியா விருது பரிந்துரை பட்டியலில் இருந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் பயிற்சியாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்தது.
மேலும், தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கும் மாரியப்பனின் பெயர் அண்மையில் பரிந்துரை செய்யப்பட்டது.
அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்சியார்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், துரோணாச்சாரியா விருது பரிந்துரை பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயரி நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அவர் மீதான குற்றவழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.