ஹைதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதையடுத்து, இன்று மும்பை வீரர்களுடன் இணைந்து, அந்த அணியின் உரிமையாளர்களான அம்பானி குழுமத்தினர் வெற்றியை மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர். ஒவ்வொரு போட்டிக்கும் நேரில் வந்து அணியினரை உற்சாகப்படுத்திய நீதா அம்பானி, அவரது கணவர் முகேஷ் அம்பானி என ஒட்டுமொத்த 'அம்பானி' குடும்பமும் இந்த கலந்துகொண்டது. மேலும், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் என அனைத்து துறை ஆளுமைகளும் இதில் விழாவில் கலந்து கொண்டு வெற்றியைக் கொண்டாடினர்.