தற்போது உலகில் அதிவேகமான இடக்கை பந்துவீச்சாளர் யார்? என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனும், நியூசிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் மெக்லீனகனும் ட்விட்டரில் ட்வீட்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அவர்களை இடைமறித்து உள்நுழைந்த முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ், "இப்போதைக்கு ஆஷிஷ் நெஹ்ரா #onlyjokingchampion" என்று கிண்டலாக பதிவு செய்தார்.
இதற்கு பதில் அளித்த ஜான்சன், "அவரது ஓட்டம் உண்மையில் வேகமாக தான் உள்ளது" என நக்கலாக ட்வீட் செய்தார்.
ஜான்சனின் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், "நெஹ்ராவின் லைன் அன்ட் லென்த் மற்றவர்களை விட சிறப்பாகவே உள்ளது" என்றார். இதை கிண்டல் செய்யும் விதமாக "இதைவிட வேடிக்கையாக பேசுபவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்" என்றார்.
இதையடுத்து, ஜான்சனின் இந்த ட்வீட்டிற்கு இந்திய ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
"நெஹ்ரா வேகமாக பந்து வீசுகிறாரோ இல்லையோ, அவர் இன்னும் அணியில் நீடிக்கிறார். நீங்கள் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
மற்றொரு ரசிகர், "ஐபிஎல்-ல் போனியாகாததால் மிட்சல் ஜான்சன் இது போன்று பேசுகிறார். அவர் ஐபிஎல்லுக்கு கிடைத்த சாபம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z516-300x217.jpg)
மற்றொருவர், "ஜான்சனால் இனிமேல் தெரு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது. சர்வதேச போட்டிகளை மறந்து விடுங்கள். சச்சினிடம் வாங்கிய அடியை மறந்தாச்சா?" என்று கேட்டுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர், "என்னதான் இருந்தாலும் அவர் நெஹ்ராஜி. நீ ஒரு சாதாரண ஆள்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து ரசிகர்கள், சமூக தளங்களில் காரசாரமாக ட்வீட் செய்து வருகின்றனர்.