Advertisment

ஒரு போட்டிக்கு 1.76 கோடி... ஒரு பந்துவீச 'ஸ்டார்க்' வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐ.பி.எல். 2024 சீசனில், ஸ்டார்க் ஒரு சீசனில் ஒரு அணி விளையாடக்கூடிய அதிகபட்ச போட்டிகளான, 17 போட்டிகளிலும் ஆடினால் அவர் ஒரு போட்டிக்கு 1.45 கோடி ரூபாய் சம்பாதிப்பார்.

author-image
Martin Jeyaraj
New Update
Mitchell Starc earning per ball in IPL 2024 for KKR Tamil News

மீண்டும் 2018 சீசன் ஐ.பி.எல்-லில் என்ட்ரி கொடுத்த ஸ்டார்க்கை, மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி 9.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ச. மார்ட்டின் ஜெயராஜ்

Advertisment

IPL 2024 | Mitchell Starc | Kolkata Knight Riders: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியில் விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய வேகப் புயல் மிட்செல் ஸ்டார்க். அதிகபட்சமாக மணிக்கு 160.4 கி.மீ வேகத்தில் பந்துகளை வீசும் அவருக்கு மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போலவே அடிக்கடி காயம் ஏற்பட்டு விடும். அதனால் தான் என்னோவோ, அவர் ஐ.பி.எல் போன்ற உச்சபட்ச பரபரப்பு தொற்றிக் கொள்ளும் தொடர்களை தவிர்த்து வந்தார். 

ஆரம்பத்தில் இந்த தொடரில் களமாடிய அவரை அணிகள் போட்டி போட்டு வாங்கின. 2014ல் ஸ்டார்க் தனது முதல் ஐ.பி.எல். அறிமுகத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் செய்தார். அந்த அணி அவரை 5 கோடிக்கு வாங்கியது. அந்த சீசனில் 14 விக்கெட்டை கைப்பற்றினார் ஸ்டார்க். அதன்பிறகு, 2015 சீசனின் போது அவர் காயத்தால் அவதியுற்றார். அதனால், சீசனின் முதல் பாதியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. பலத்த அடி வாங்கிய கோலி தலைமையிலான ஆர்.சி.பி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்த இக்கட்டான தருணத்தில் அணியில் சேர்ந்த ஸ்டார்க், பந்துவீச்சில் பலே கில்லாடியாக இருந்தார். கடைசி இடத்தில் இருந்த ஆர்.சி.பி-யை கடகடவென புள்ளிப் பட்டியலில் முன்னேற உதவினார். அந்த சீசனில் அவர் மொத்தமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு நடந்த 2016 சீசனில் கால் எலும்பு முறிவு காரணமாக அவரால் களமாட இயலவில்லை. 2017ல் அந்த ஆண்டில் நடந்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு ஸ்டார்க் ஆர்.சி.பி-யில் இருந்து விலகினார். 

மீண்டும் 2018 சீசன் ஐ.பி.எல்-லில் என்ட்ரி கொடுத்த அவரை, மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி 9.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த சீசனுக்கு முன்னதாக அவருக்கு காயம் ஏற்படவே, ஒரு போட்டியில் கூட ஆடாமல் தொடரில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நடந்த 2019 சீசன்,  ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெற்றதால், அந்த சீசனிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தார். இதன்பிறகு நடந்த 2020, 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக 4 சீசன்களில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில் தான், ஸ்டார்க் 2024 ஐ.பி.எல் சீசனில் தான் களமாட இருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் அவரது ஏல விலை எக்கு புக்காக எகிறும் என பலரும் கணக்குப்போட்டனர். அவர்கள் நினைத்தைப் போலவே, டிசம்பர் 2023 இல் துபாயில் நடந்த ஏலத்தில் அவரை வசப்படுத்த 10 அணிகளும் கோதாவில் குதித்தன. இதில் முந்தியடித்துக் கொண்ட கொல்கத்தா அணி அவரை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்தார்.

தற்போது ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக வலம் வரும் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பாதிப்பார்? ஒரு பந்துவீசுவதான் மூலம் அவர் எவ்வளவு சம்பாதிப்பார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகள் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அந்த கேள்விகளுக்கு இங்கு விடையளிக்க முயன்றுள்ளோம். 

ஸ்டார்க் ஐ.பி.எல் 2024-ல் ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பாதிப்பார்?

ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் இந்த சீசனில் 14 போட்டிகளை மட்டுமே விளையாடினால், அதாவது கொல்கத்தா அணி பிளேஆஃப்-க்கு தகுதி பெறவில்லை என்றால், அவர் ஒரு போட்டிக்கு 1.76 கோடிகளை சம்பாதிப்பார். 

ஒருவேளை, இந்த சீசனில் ஸ்டார்க் ஒரு சீசனில் ஒரு அணி விளையாடக்கூடிய அதிகபட்ச போட்டிகளான, 17 போட்டிகளிலும் ஆடினால் அவர் ஒரு போட்டிக்கு 1.45 கோடி ரூபாய் சம்பாதிப்பார்.

ஸ்டார்க் ஐ.பி.எல் 2024-ல் ஒரு பந்துவீசுவதான் மூலம் எவ்வளவு சம்பாதிப்பார்?

மிட்செல் ஸ்டார்க் இந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடினால், மேலே குறிப்பிட்டது போல கொல்கத்தா அணி பிளேஆஃப்-க்கு தகுதி பெறவில்லை என்றால் மற்றும் அனைத்து ஆட்டங்களிலும் நான்கு ஓவர்களை அவர் வீசினால், அவர் மொத்தம் 56 ஓவர்களை வீசுவார். இதன் மூலம் அவர் இந்த தொடரில் 336 பந்துகளை வீசுவார்.  அதன்படி பார்த்தல், ஒரு பந்து வீச்சுக்கு அவர் 7 லட்சத்து 36 ஆயிரத்து 607 ரூபாயை சம்பாதிப்பார்.

ஒருவேளை, இந்த சீசனில் ஸ்டார்க் ஒரு சீசனில் ஒரு அணி விளையாடக்கூடிய அதிகபட்ச போட்டிகளான, 17 போட்டிகளிலும் ஆடினால் மற்றும் ஸ்டார்க் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான்கு ஓவர்கள் வீசினால், அவர் மொத்தம் 68 ஓவர்கள் வீசுவார். அதன்படி அவர் 408 பந்துகளை வீசுவார். அதன் மூலம் அவர் ஒரு பந்து வீச்சுக்கு 6 லட்சத்து 06 ஆயிரத்து 617 ரூபாயை சம்பாதிப்பார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kolkata Knight Riders Mitchell Starc IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment