இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென தனியிடம் பிடித்த மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தயாராகி வருகிறார்.
தோனி பற்றிய உங்கள் திட்டம் என்ன? - நேர்காணலில் சுனில் ஜோஷி அளித்த பதில் இதுதான்
இந்நிலையில், கிரிக்கெட் உபகரண கவசங்கள் சகிதமாக, பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோவை மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தமிழ் என் தாய்மொழி, தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என ரசிகரின் கேள்விக்கு ட்விட்டரில் தமிழில் பதில் அளித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் மிதாலி ராஜ்.
விளையாட்டு வேறு; பெர்சனல் வேறு - ரசிகரை அலறவிட்ட கால்பந்து வீரர் (வீடியோ)
தவிர, 'சபாஷ் மிது' என்று பெயரிடப்பட்டுள்ள மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு குறித்த புதிய படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடிக்க வருவது குறிப்பிடத்தக்கது.