Advertisment

4 ஓவர்... 3 மெய்டன்... 2 விக்கெட்... 1 ரன்! டி20 போட்டியில் ஒரு ரெக்கார்ட் பவுலிங்!

இலக்கை துரத்திய செயின்ட் கீட்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் பார்படாஸ் பவுலர் மொஹம்மத் இர்பான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mohammad irfan

mohammad irfan

நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில், பாகிஸ்தானைச் சேர்ந்த 15 அடி பவுலர் மொஹம்மத் இர்பான் சாதனை பவுலிங் புரிந்துள்ளார்.

Advertisment

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், Barbados Tridents அணியும், St Kitts and Nevis Patriots அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய செயின்ட் கீட்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் பார்படாஸ் பவுலர் மொஹம்மத் இர்பான். முதல் ஓவரின் முதல் பந்திலயே, செயின்ட் கீட்ஸ் அணியின் கேப்டன் கிரிஸ் கெய்லை காலி செய்த இர்பான், மேற்கொண்டு எவின் லெவிசையும் அவுட்டாக்கினார்.

அதுமட்டுமின்றி 4 ஓவர்கள் பவுல் செய்த இர்பான், மூன்று மெய்டன் ஓவர்களுடன், 1 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எகானமி 0.25.

டி20 போட்டிகளில் மிகவும் சிக்கனமான பவுலிங் இதுதான்.

ஆனால், சோகம் என்னவெனில், இர்பானின் பார்படாஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிட்டது.

Live Cricket Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment