Advertisment

டெஸ்ட் சீரிஸ்னாலே இவங்க மாஸ்... இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த டாப் வீரர்கள்!

இதுவரை, ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே டெஸ்ட் தொடரில் 700+ ரன்களைக் கடந்துள்ளார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை தனது கேரியரில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

author-image
Martin Jeyaraj
New Update
Most runs in a test series Top 10 Indian batters Tamil News

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்து இந்திய கிரிக்கெட் வரலாற்று புத்தகங்களில் சில வீரர்கள் தான் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Indian Cricket Team: பல மொழி, பல கலாச்சாரம், பல மதம் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக கருதப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பொன்மொழிக்கேற்ப, பல முகங்களை கொண்ட இந்திய மக்கள் மத்தியில் கிரிக்கெட் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுகிறது. 

Advertisment

இந்த விளையாட்டின் சர்தேச அரங்கில் இந்தியாவின் வீரர்கள் தங்களின் முத்திரையப் பதித்து, காலத்தால் அழிய புகழை பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் இளம் வீரர்களும் அந்த புகழுக்காக சாதனையை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த சிறப்பான முயற்சியில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்து இந்திய கிரிக்கெட் வரலாற்று புத்தகங்களில் சில வீரர்கள் தான் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். 

இந்த பேட்டிங் மேஸ்ட்ரோக்கள் வலிமையான எதிரணிகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் மகிமையின் பரப்பியவர்களாகவும் மாறியுள்ளனர். தற்போது, ​​புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர். 

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், டெண்டுல்கரின் வாழ்க்கையில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு டெஸ்ட் தொடரில் கூட 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்ததில்லை. சிறந்த பேட்டர் 2007-08 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 493 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவே ஒரு டெஸ்ட் தொடரில் அவரது அதிகபட்சமாகும்.

இதுவரை, ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே டெஸ்ட் தொடரில் 700+ ரன்களைக் கடந்துள்ளார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை தனது கேரியரில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

10. மொஹிந்தர் அமர்நாத் – 598 ரன்கள் - வெஸ்ட் இண்டீஸ், 1983

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மொஹிந்தர் அமர்நாத், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல் மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரைக் கொண்ட புகழ்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு வரிசைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினார். 1982-83ல் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்தியாவின் சுற்றுப்பயணத்தில், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், அமர்நாத் அதிக ரன்களை அடித்தார்.

9 இன்னிங்ஸ்களில் அவர் 66.44 சராசரியில் 598 ரன்களைக் குவித்தார். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புகழ்பெற்ற பேட்டர் கிளைவ் லியோட் அந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது ஆறு இன்னிங்ஸ்களில் 407 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன்களை எடுத்தார்.

9. ராகுல் டிராவிட் – இங்கிலாந்து - 602 ரன்கள், 2002

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடி காட்டி இருந்தார். டிராவிட் கிட்டத்தட்ட 32 மணி நேரம் பேட்டிங் செய்து 230 ஓவர்களை எதிர்கொண்டார். அவர் மொத்தமாக 85 பவுண்டரிகளை விளாசினார்.

அவர் வெறும் 6 இன்னிங்ஸ்களில் 100.33 சராசரியில் 602 ரன்கள் எடுத்தார். அந்த புகழ்பெற்ற டெஸ்ட் தொடரின் போது, ​​டிராவிட் நாட்டிங்ஹாமில் 115 ரன்களின் மேட்ச்-சேவிங் இன்னிங்ஸை விளையாடினார். ஹெடிங்லியில் 148 ரன்களை மேட்ச்-வின்னிங் செய்தார், மேலும் ஓவலில் 217 ரன்களுடன் இங்கிலாந்தை நோகடித்து இருந்தார். 

8. விராட் கோலி – 610 ரன்கள் - இலங்கை, 2017

நவீன கால கிரிக்கெட்டின் நட்சத்திரமான விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2017 இல் இலங்கையின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது கோலி மீண்டும் தனது தகுதியை நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கோலி 600 ரன்களுக்கு மேல் குவித்தார். 0, 104*, 213, 243, மற்றும் 50 ரன்களுடன், கோலி ஐந்து இன்னிங்ஸ்களில் 610 ரன்களுடன் தொடரை முடித்தார்.

7. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – இங்கிலாந்து 618* ரன்கள், 2024

தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 618* ரன்கள் எடுத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு இரட்டை சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்து மிரட்டி வருகிறார். அவர் 700 ரன்களுக்கு மேல் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

6. ராகுல் டிராவிட் - ஆஸ்திரேலியா 619 ரன்கள், 2003/04

ராகுல் டிராவிட், வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மிகவும் நம்பகமான பேட்டர்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார். மிகவும் தாமதமாக பந்தை விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த டிராவிட், வெளிநாட்டு மண்ணில் மிக நீண்ட வடிவத்தில் டன் கணக்கில் ரன்களை எடுக்க உதவியது.

டிராவிட் 2003-04 இல் ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புதமான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தத் தொடரில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் டிராவிட் இரட்டைச் சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

அந்த புகழ்பெற்ற டெஸ்ட் தொடரின் போது, ​​டிராவிட் 8 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் (233) மற்றும் மூன்று அரைசதங்களுடன் 123.80 என்ற சிறந்த சராசரியுடன் 619 ரன்கள் எடுத்தார், இது பார்வையாளர்களுக்கு தொடரை 1-1 என சமன் செய்ய உதவியது.

5. திலீப் சர்தேசாய் – வெஸ்ட் இண்டீஸ் எதிராக 642 ரன்கள், 1972

1971 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் சர்தேசாய், 1-0 என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, ​​3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 642 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் அறிமுகமான இந்தியப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், அதிக ரன் குவித்தவராக முடிந்தார். 

4. விராட் கோலி – இங்கிலாந்து - 655 ரன்கள், 2016

2016/17 இல் இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, ​​இந்திய பேட்டர் விராட் கோலி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது, விராட் கோலி இரண்டு சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் உட்பட 655 ரன்களை குவித்தார். அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். 

கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என கைப்பற்றியது. அந்த புகழ்பெற்ற தொடரின் போது, ​​கோலி எட்டு இன்னிங்ஸ்களில் 109.16 என சராசரி வைத்திருந்தார். 

3. விராட் கோலி - 692 ரன்கள் ஆஸ்திரேலியா 2014/15

விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அதீத விரும்பும் கொண்டவர். கோலி பலம் வாய்ந்த ஆஸி.க்கு எதிராக 1500 டெஸ்ட் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இருப்பினும், 2014-15ல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.கோலி நான்கு போட்டிகளில் 86.50 சராசரியில் 692 ரன்கள் எடுத்து நான்கு டன்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட, சிறந்த ஸ்கோரான 169 ரன்களுடன் தொடரை முடித்தார். இருப்பினும், அவரது அதிரடியான செயல்பாட்டிற்குப் பிறகும், இந்தியா தொடரை 2-0 என இழந்தது.

2. சுனில் கவாஸ்கர் – வெஸ்ட் இண்டீஸ் எதிராக 732 ரன்கள், 1978/79

டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மட்டுமே பெற்றுள்ளார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு முறை அந்த சாதனையைப் படைத்துள்ளார். 1978-79ல் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, ​​கவாஸ்கர் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 732 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் அவரின் சராசரி 91.50 ஆகும்.

அந்தத் தொடரில் கவாஸ்கர் நான்கு சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்தை சிறப்பாக 205 ரன்களுடன் அடித்தார். ஆறு போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என வென்றது.

1. சுனில் கவாஸ்கர் – வெஸ்ட் இண்டீஸ் 774 ரன்கள், 1971 

1970-71ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய சுற்றுப்பயணத்தில், அறிமுக கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் தொடரில் 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கவாஸ்கர் 774 ரன்களை அடித்து தனது முத்திரை பதித்தார். இந்தத் தொடரின் முக்கிய சிறப்பம்சமாக அவரது 124 மற்றும் இறுதி டெஸ்டில் ஒரு அற்புதமான 220 ஆகும். அந்த வரலாற்றுத் தொடரின் போது கவாஸ்கரின் முயற்சியில் எட்டு இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் அடங்கும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment