/tamil-ie/media/media_files/uploads/2017/12/z980.jpg)
Dhoni beat Pandya in Running
நேற்றையை இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்களை கதற வைத்தது ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம். முதல் போட்டியில் 112 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வெற்றி வாகை சூடிய இலங்கை, நேற்று 'போதும்... போதும்'-னு அலறும் அளவிற்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தெறிக்கவிட்டார். 393 எனும் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இலங்கை.
இப்போட்டி தொடங்கும் முன்னர், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களான தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் 100 மீ. ஓட்டபந்தயத்தில் போட்டியிட்டனர். இதில் தோனி, ஹர்திக் பாண்ட்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதிலென்ன ஆச்சர்யம்... தோனி பேஸிக்கா ஒரு அத்லெட்! அதனால் ஜெயிச்சிருக்கலாம்.. இருக்கலாம் தான்... ஆனால், தோனிக்கு 36 வயது... பாண்ட்யாவுக்கு 24 வயது...! வேற ஒன்னும் இல்ல!
A quick 100 metre dash between @msdhoni and @hardikpandya7. Any guesses on who won it in the end? #TeamIndia#INDvSLpic.twitter.com/HpboL6VFa6
— BCCI (@BCCI) 13 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.