24 வயது பாண்ட்யாவின் இளமையை விஞ்சிய 36 வயது தோனி! ரன்னிங் மெஷின் தோனி! (வீடியோ)

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களான தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் 100 மீ. ஓட்டபந்தயத்தில் போட்டியிட்டனர். இதில் தோனி, ஹர்திக் பாண்ட்யாவை....

By: Updated: December 14, 2017, 06:35:34 PM

நேற்றையை இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்களை கதற வைத்தது ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம். முதல் போட்டியில் 112 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வெற்றி வாகை சூடிய இலங்கை, நேற்று ‘போதும்… போதும்’-னு அலறும் அளவிற்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தெறிக்கவிட்டார். 393 எனும் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இலங்கை.

இப்போட்டி தொடங்கும் முன்னர், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களான தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் 100 மீ. ஓட்டபந்தயத்தில் போட்டியிட்டனர். இதில் தோனி, ஹர்திக் பாண்ட்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதிலென்ன ஆச்சர்யம்… தோனி பேஸிக்கா ஒரு அத்லெட்! அதனால் ஜெயிச்சிருக்கலாம்.. இருக்கலாம் தான்… ஆனால், தோனிக்கு 36 வயது… பாண்ட்யாவுக்கு 24 வயது…! வேற ஒன்னும் இல்ல!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ms dhoni 36 beats youngster hardik pandya in 100m dash watch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X