36-வது வயதில் மகேந்திர சிங் டோனி... கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ!

மகேந்திர சிங் டோனி இன்று 36-வது பிறந்தநாளைகேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். டோனியின் மனைவி ஷாக்‌ஷி மற்றும் அவர்களது மகள் ஸிவா ஆகியோரும் அங்கிருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி இன்று 36-வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார்.

மகேந்திர சிங் டோனி இன்று தனது 36-வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைத்தார். இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இன்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஓருநாள் போட்டிகள் தொடர் மற்றும் ஒரு டி20 போட்டி தொடரிலும் விளையாடி வருகிறது.

ஒரு நாள் போட்டித் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றியுடன் நிறைவு செய்து தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் இருந்த நிலையில், எம்.எஸ் டோனிக்கு பிறந்தநாளும் வந்துவிட்டது. இதையடுத்து, டோனி சகவீரர்களிளோடு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது, டோனியின் மனைவி ஷாக்‌ஷி மற்றும் அவர்களது மகள் ஸிவா ஆகியோரும் அங்கிருந்தனர்.

டோனி கேக் வெட்டும் காட்சியை ஹர்திக் பாண்டியா வீடியோவாக எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரல் அடித்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் பிஸியாக ஃபீல்டிங் செய்தார் டோனி. ஆனாலும், கேப்டன் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இதன் காரணமாக நேற்றைய போட்டியில் டோனி பேட்டிங் பிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஃபீல்டிங்கின் போது இரண்டு கேட்ச்சுகளை பிடித்து வெஸ்ட் இன்டிஸ் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

×Close
×Close