வாழ்த்து மழையில் நனையும் எம்.எஸ் டோனி... பிசிசிஐ வெளியிட்ட பர்த்டே வீடியோ!

டோனியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் #HBDThalaMSD #HBDThalaMSD #HappyBirthdayMSD போன்ற ஹேஸ்டேக்குகள் செம்ம ட்ரெண்டாககின. மேலும்,தொடர் பாராட்டு மழையில் நனைந்து...

36-வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி, நண்பர்கள் உறவினர்கள் ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

டோனியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSD என்ற ஹேஸ்டேக் செம்ம ட்ரெண்டாககி வருகிறது. இந்த நிலையில், ஏராளமனோர் டோனிக்கு பிறந்தநாள் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று பிறந்தநாள் கொண்டாடும் டோனிக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கையின் சிறந்த தருணங்களை பெற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சேவாக் பேட்டிங்ங்கில் மட்டுமே அதிரடி காட்டுபவர் அல்ல என்பதற்கு அவர் பதிவிடும் ட்வீட்களே சாட்சி. அந்த வகையில், சேவாக், டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகேந்திர சிங் டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது ஹெலிகாப்டர்( ஹெலிகாப்டர் ஷாட்) தொடர்ந்து பறந்து எங்களின் இதயங்களில் வந்திறங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்: மிஸ்டர். ஹெலிக்காப்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும் நண்பரே என்று பதிவிட்டுள்ளார்.

ஹேப்பி பர்த்டே டோனி… பிசிசிஐ-வெளியிட்டுள்ள  விடியோ

டோனி கடந்துவந்த பாதைகளும், அவர் இந்திய அணிக்கு தேடித்தந்த பெருமைகளையும் நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ.

×Close
×Close