Mumbai Indians vs Rajasthan Royals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Live Blog
IPL 2019: MI vs RR
மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இரு ஓவர்களில், பிட்ச் தன்மை குறித்து கவனமாக ஆய்வு செய்த மும்பை ஓப்பனர்ஸ், அடுத்த மூன்று ஓவர்களை சாத்தியதில், மும்பை 50 ரன்களை தாண்டியது.
இருக்கு. இன்னைக்கு ஒரு மெகா இன்னிங்ஸ் காத்திருக்கு
வணக்கம் என் அன்பு சொந்தங்களே... இன்றையப் போட்டியில் எனக்கு என்னமோ ராஜஸ்தான் சேஸிங் செய்ய எடுத்த முடிவு தவறோ-னு படுது.. பிட்சில் எந்த தாக்கமும் இல்லை... பேட்டுக்கு நேரா பந்து வருது... ஸோ, மும்பை 200+ அடிக்கவே வாய்ப்பிருக்கு.
அதை ராஜஸ்தான் சேஸிங் செய்வது சற்று கடினமே.
மும்பை - 67%
ராஜஸ்தான் - 33%
குல்கர்னி ஓவரில் ரோஹித், மிட் ஆஃப்-ல் நின்றுக் கொண்டிருந்த ஜோஸ் பட்லரிடம் அடித்துவிட்டு, பாய்ந்து ரன்னிங் ஓடி, டைவ் அடித்து கிரீஸை கடந்து தப்பினார். யோவ்... இதுலாம் உனக்கு தேவையா? நீயே இப்போதான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்க... சும்மா ஒத்தை ரன்னுக்காக, ஏதோ உலகக் கோப்பை தொடர் மாதிரி டைவ்-லாம் அடிக்குறியே!!
திங்கட்கிழமை டீம் செலக்ஷன் இருக்கும் தெரியும்-ல...
ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, ரோஹித் ஷர்மா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக்கு அவர்கள் முழுதாக் வந்து சேர்வார்களா என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல் ரவுன்டரும், ராஜஸ்தான் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இன்று வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் அஜின்க்யா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அடிக்குற வெயிலில் பவுலிங் தேர்வு செய்த ரஹானே நல்லாயிருப்பார் என ராஜஸ்தான் வீரர்களால் வாழ்த்தப்படுகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தின் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ்-காக நான் அன்பரசன் ஞானமணி, உங்கள் கணிப்பு கண்ணாயிரத்துடன்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights