இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை (டிசம்பர் 7) தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கவுள்ள போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியில் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் பந்துவீச்சில் இந்திய அணி சரியான திட்டத்துடன் விளையாடி வருகிறது. ஆனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இஷாந்த் சர்மா காயம் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து முதல்போட்டியில் விளையாடிய ஷமி, 2-வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் ஆகியோர் காயம்காரணமாக வெளியேறினர். இதில் உமேஷ் யாதவிற்கு பதிலாக தமிழக வீர்ர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமேஷ் யாதவிற்கு பதிலாக யார் இடம்பெறுவார் என்ற போட்டியில், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூரை ஓரம் கட்டிய வேகப்பந்துவீச்சாளர் நவதீப் சைனி அறிமுக வீரராக அணியில், இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
சிறந்த வேகப்பந்து வீச்சாளரான சைனி இதுவரை 46 முதல் தர போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 32 ரன்கள் குவித்து 6 விக்கெட் வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும். குறுகிய காலத்தில் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்திய சைனி ஷர்துல் தாகூருக்கு மாற்றாக இடம் பிடித்துள்ளார். ஏற்னவே இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ள சைனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷர்துல் தாகூர் 2018-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் முதல் தர போட்டியில் சைனியை விட அதிக போட்டிகளில் விளையாடியுள்ள தாகூர் 62 போட்டிகளில் 206 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 31 ரன்கள் குவித்து 6 விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்சமாகும். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தாகூர் அதன்பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.
வேகப்பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தாகூர் 2016-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை வென்ற மும்பை அணிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த தொடரின் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசததினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.