Advertisment

NED vs PAK T20 World Cup: 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

Netherlands vs Pakistan T20 World Cup 2022 Live Streaming, When and Where to watch NED vs PAK T20 World Cup Telecast : டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
NED vs PAK T20 World Cup 2022 | NED vs PAK T20 Match T20 World Cup 2022

NED vs PAK T20 World Cup: Match will be played between Netherlands vs Pakistan on 30th OCT, Sunday

 Netherlands vs Pakistan {NED vs PAK} T20 World Cup 2022 Cricket Score Streaming Online ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடுயாமல் தடுமாறியது.

நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இரங்கிய மைபர்க் ரன்களிலும் , மேக்ஸ் டி டவுட் 8 ரன்களும், ஸ்டீபன் மைபர்க் 6 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரிஸ் ராஃப் வீசிய பந்தில், பாஸ் டி லீட் முகத்தில் கடுமையான காயம் அடைந்தார். இதனால், ரிடையர்டு ஹர்ட் முறையில் அவர் விளையாட முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

டாம் கூப்பர் 1 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில் காலின் அக்கர்மன் ,ஸ்காட் எட்வர்ட்ஸ் நிலைத்து ஆடினர். அக்கர்மன் 27 ரன்களும் , எட்வர்ட்ஸ் 15 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. .

பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட், முகமது வாசிம் 2 விக்கெட்டுகளும் ,ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா , ஹாரிப் ரவுப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் களமிறங்கினர்.

கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் , பக்கர் ஜமான் இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அடித்தனர்.

பக்கர் ஜமான் 20 ரன்களிள் அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடி ரிஸ்வான் 49 ரன்களில் அவுட் அரை சதத்தை தவற விட்டார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 22 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷதாப் கான் ஆட்டநாயகன் பரிசு பெற்றார். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பில் தொடர்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Cricket T20 Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment