/tamil-ie/media/media_files/uploads/2018/03/a588.jpg)
அப்படின்னு இலங்கை மக்கள் நேற்று நம்ம சுரேஷ் ரெய்னாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கின்றனர்.
இலங்கையின் கொழும்பு நகரில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடர் இப்போதுதான் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, நமக்கு கிடைத்த தகவலின் படி, இத்தொடரின் பார்வையாளர்கள் எண்ணிகையும் தற்போது அதிகரித்துள்ளது.
பிசிசிஐ-ன் உருப்படியான அறிவிப்பு - படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்க, இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வென்றது. மூன்றாவது போட்டியில் வங்கதேசம் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை அனாயசமாக எட்டிப் பிடித்து ரெக்கார்ட் பிரேக் படைத்தது வங்கதேசம். இதன்பிறேகே, இத்தொடரின் மீது ரசிகர்களின் பார்வை அதிகம் விழுந்தது. இன்று இரவு 7 மணிக்கு நான்காவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில், இரண்டாவது முறையாக இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு, சரியான பதிலடி கொடுக்க காத்திருக்கிறது இந்தியா.
இந்த நிலையில், இந்திய அணி நேற்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுடன் சேர்ந்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் பாடத் தொடங்கினார். பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடி சக வீரர்களை மகிழ்வித்தார். 1.55 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பி.சி.சி.ஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. செட்டைப்பையன் ரெய்னா ஓர் இசைப்பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
VIDEO: You've seen him on the field, but ever seen him SING a Kishore Kumar classic? Presenting - @ImRaina the SINGER #TeamIndiahttps://t.co/yhvRwmbnDdpic.twitter.com/llB03VW4fH
— BCCI (@BCCI) 11 March 2018
இதற்கு முன்னர், "மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்" என்ற பாலிவுட் படத்தில் 'து மிலி' எனும் பாடலை ரெய்னா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.