இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை; அமித் ஷா

இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் பேசுகையில், “உண்மையாகப் பேச வேண்டுமென்றால், நாளைய போட்டியில் இந்தியா வெல்லவே வாய்ப்புகள் அதிகம். அவர்களிடம் சிறந்த அணி உள்ளது. ஆனால், இது போன்ற பெரிய ஆட்டங்களில் சிறிய தருணங்களில் நடப்பது முக்கியம் என நான் எப்போதும் நம்புவேன். எனவே இரு அணிகளும் வெல்ல 50-50 வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.

மேலும், அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் கிரிக்கெட் தொடர் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “இந்தியாவும் பாகிஸ்தானும் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் பாகிஸ்தானோ அல்லது பாகிஸ்தானில் இந்தியாவோ கிரிக்கெட் தொடர்கள் ஆட வாய்ப்பேயில்லை” என தெரிவித்துள்ளார்.

×Close
×Close