ICC World Cup 2019, England Vs New Zealand Score Updates: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயன் மோர்கன் தலைமையிலானஆஸ்திரேலிய அணியும் மோதின.
இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Live Blog
Live: ENG vs NZ Score: England vs New Zealand Scorecard Updates, Lord's, London
பட்லர் அரைசதம்!!
விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்திய ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்திருக்கிறார். இங்கிலாந்து வெற்றிப் பெற்றுவிட்டால், வாழ்நாள் முழுவதும் இந்த இன்னிங்சை அவரால் மறக்க முடியாது. அதேபோல், பென் ஸ்டோக்ஸ் 81 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு ஓவருக்கும் பிரஷர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 36வது ஓவரில், ஒரு எல்பிடபிள்யூ ரிவியூ சென்று நியூசிலாந்து அதை வீணடித்தது. ஸ்டோக்ஸ் - பட்லர் தலா 30 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி வருகின்றனர். உண்மையில் அவர்களது பார்ட்னர்ஷிப்பின் மதிப்பு மிக அபாரமானது.
அடக்கடவுளே என்ன கேட்ச் இது!
நீஷம் ஓவரில், மோர்கன் தூக்கி அடிக்க, பழைய பூஸ்ட் விளம்பரத்தில் பாய்ந்து, பறந்து வந்து சச்சின் கேட்ச் பிடிப்பது போல, பெர்கியூசன் பாய்ந்து வந்து பிடிக்க, கேப்டன் மோர்கன் 9 ரன்களில் அவுட்!
IS THAT A CATCH? THAT IS A CATCH!#EoinMorgan pulls and Lockie Ferguson takes a brilliant low grab diving forward. Jimmy Neesham has a wicket with his first ball!
New Zealand are firmly on top now. In walks Jos Buttler...#CWC19 | #CWC19Final pic.twitter.com/BuiUPdAMgr
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
அனைவரும் பேர்ஸ்டோ அவுட்டான பிறகே, ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்புவது போல் இருக்கிறது என்கின்றனர். இல்லை... எப்போது 10 ரன்களுக்குள் ஜோ ரூட் அவுட்டனாரோ, அப்போதே நியூசிலாந்து பக்கம் வெற்றிக் காற்று மணிக்கு 150 கி.மீ.வேகத்தில் வீசத் தொடங்கிவிட்டது எனலாம்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், டி கிராண்ட் ஹோம் ஓவரில், 30 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட், லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து தனது மிக முக்கியமான விக்கெட்டை இழந்திருக்கிறது. உண்மையில், நியூசிலாந்தின் கையே இப்போது ஓங்கி இருக்கிறது.
அரைசதத்தை நெருங்கிய டாம் லாதம், 56 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து, க்றிஸ் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இது நியூசிலாந்தின் ஏழாவது விக்கெட்டாகும். தன்னுடைய பேட்டிங் வலிமைக்கு ஏற்ப எவ்வளவு அடிக்க முடியுமோ, முடிந்தளவு அதை செய்திருக்கிறது நியூசிலாந்து. இன்னும் ஒரு ஓவரே மீதமுள்ளது.
43 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதமும், கிராண்ட்ஹோமும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும், 50 ஓவர்கள் வரை நிற்கும் பட்சத்தில், நியூசிலாந்து மேற்கொண்டு 50 - 60 ரன்கள் வரை அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
4 விக்கெட்டுகளை இழந்த பிறகு, களத்தில் நிற்பது நீஷம், லாதம் எனும் இரு ஹிட்டர்கள். இருவருமே இடது கை ஆட்டக்காரர்கள். இதனால், பீல்டிங்கை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம், இங்கிலாந்து கேப்டனுக்கு இல்லை. பவுலிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்த தடையை மீறி, இருவரும், அணிக்கு பெரும் பங்களிப்பு ஆற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
நியூஸி., 38 ஓவர்கள் முடிவில் 165-4
எது நடக்கக் கூடாதோ, எது நன்றாகவே நடக்கிறது. சீனியர் வீரர் ராஸ் டெய்லர், மார்க் வுட் ஓவரில் எல்பி ஆகி 15 ரன்களில் வெளியேறினார். ரிவியூ வாய்ப்பு இல்லாததால், அவர் வெளியேற நேரிட்டது. ஆனால், அதன்பிறகு அந்த பந்தை செக் செய்த போது, பந்து ஸ்டம்ப்பை தாக்காமல் மேலே சென்றது தெரிய வர....
அப்புறம் என்ன தலையில துண்ட போட வேண்டியது தான்!
31 ஓவர்களில் நியூசிலாந்து 130-3. இனி நியூசிலாந்து செய்ய வேண்டியவை,
மேற்கொண்டு அடுத்த 10 ஓவர்களுக்கு விக்கெட் விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
40 ஓவர்களுக்கு 180 எனும் நிலையை, இதே மூன்று விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு எட்ட முயற்சிக்க வேண்டும்.
கடைசி பத்து ஓவர்களில் அட்லீஸ்ட் 80 ரன்கள் அடிக்க வேண்டும்.
71 பந்துகளை சந்தித்த நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் அரைசதம் அடித்து, அணியில் தனது இருப்புக்கு சரியான நேரத்தில் காரணம் கற்பித்திருக்கிறார். சீனியர் வீரர் ராஸ் டெய்லருடன் அவர் அமைக்கப் போகும் பார்ட்னர்ஷிப்பே, நியூசிலாந்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது.
நியூசிலாந்து தனது கேப்டனின் விக்கெட்டை இழந்துவிட்டது. லியம் பிளங்கட் ஓவரில், அவுட் சைட் எட்ஜ் ஆகி வில்லியம்சன் 30 ரன்களில் வெளியேற, நியூசிலாந்து தனது 2வது விக்கெட்டை பறிகொடுத்தது.
HUGE APPEAL!
The umpire is unmoved, but England are convinced... and UltraEdge shows a spike!#KaneWilliamson has to go. Massive moment!#CWC19Final | #CWC19 pic.twitter.com/yZHxCluOit
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
கேன் வில்லியம்சன் மற்றும் நிகோல்ஸின் நிதானமான பேட்டிங்கால் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட நியூசிலாந்து, வெற்றிகரமாக அதே ஒரு விக்கெட்டுடன் 100 ரன்களைக் கடந்தது. 22 ஓவர்கள் முடிவில் 102/1. இங்கிருந்து இரு பேட்ஸ்மேன்களும், அடுத்த கியருக்கு மாறினால் நலம்.
ஹென்றி நிகோல்ஸ் 50 பந்துகளை சந்தித்ததே நியூசிலாந்துக்கு மிகப்பெரிய பூஸ்ட் தான். இனி, நிச்சயம், நியூசிலாந்து 280 ரன்களைக் கடந்து இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது. சுத்தமாகவே ஃபார்மில் இல்லாத ஒரு பேட்ஸ்மேனால் 50 ரன்களை சந்திக்க முடிகிறது எனில், ராஸ் டெய்லர், டாம் லாதம், நீஷம் போன்றவர்கள் நிச்சயம் இன்று அரைசதமே அடிக்கலாம்.
இந்த விதிப்படி தான், கப்தில் விக்கெட்டை இழந்த பிறகு நியூசிலாந்து விளையாடி வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன் எப்பேற்பட்ட பதட்டமான சூழ்நிலையையும் சகஜமாக்கிவிடுகிறார். இறுதிப் போட்டி போன்ற பதட்டமே இல்லாமல் நியூசிலாந்து ஆடிவருகிறது.
கிரேட்!!
10 ஓவர்கள் முடிவில் நியூஸி., 33/1
இது உண்மையில் மோசமான ஸ்கோர் இல்லை. ஆனால், அந்த ஒரு விக்கெட் வீழ்ந்ததையும் தவிர்த்திருக்கலாம். தற்போது களத்தில் வில்லியம்சன் இருப்பது, எதிர் முனையில் இருக்கும் நிகோல்ஸ்-க்கு பெரிய சப்போர்ட் என்றால், அதில் வியப்பேதும் இல்லை.
The review asked for, the long wait, and finally the release 😅
Here's how England's fans celebrated their first breakthrough of the World Cup final.#CWC19 | #CWC19Final | #NZvENG | #WeAreEngland pic.twitter.com/6l9j30o0x1
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருப்பது அவர்களின் முதல் வெற்றி எனலாம். ஆனால், இப்போது பிரச்சனை என்னவெனில், அச்சுறுத்தம் மேகமூட்டங்கள் தான். எந்நேரமும் மழை பெய்யும் என்கிற உணர்வை மனதில் ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில், பேட்டிங் தேர்வு செய்தது நல்ல முடிவு தானா என்பதை, இனி வரும் ஒவ்வொரு நிமிடமும் தான் முடிவு செய்யும்
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து பிளேயிங் XI:
மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோலஸ், கேன் வில்லியம்சன்(c), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லாதம்(w), கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லோகி ஃபெர்கியூசன்
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இன்றைய இறுதிப் போட்டியின் போது எப்போது வேண்டுமானாலும் மழை குறுக்கீடு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ரெயின், ரெயின் கோ அவே' என்றெல்லாம் பாட முடியாது... உனக்கு வெட்கம், மானம், ரோஷம் இருந்தா இந்தப் பக்கம் வந்துடாத.. புரியுதா!
போ, அங்குட்டு சென்னை பக்கம் போ...
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் டாஸ், 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை மழை பெய்ததால், டாஸ் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, பிற்பகல் 2.45 மணிக்கு டாஸ் போடப்படும்.
UPDATE: Overnight rain means toss will be delayed to 10.15am. Play will start at 10.45am.#WeAreEngland | #CWC19 | #BackTheBlackCaps
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
இந்த உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்கு போட்டியிலும், முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது
இங்கிலாந்தை 64 ரன்கள் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
நியூசிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
இன்றைய இறுதிப் போட்டிக்காக பெவிலியனில் தங்களுக்கு ஏற்ற இடத்தைப் பிடிக்க, ஜென்டில்மேன் ரசிகர்கள் முண்டியடித்து ஓடும் காட்சி. அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே!!
The members are off and racing for the best vantage points in the pavilion as the gates fly open for the #CWC19 final! pic.twitter.com/sNYMUe3v9d
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
டைட்டில் பார்த்தவுடன் ஜெர்க் ஆக வேண்டாம். இறுதிப் போட்டி நடைபெறவுள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று காலை லேசான மழை பெய்திருக்கிறது. ஆனால், அதன்பிறகு மழை நின்று மேகங்களும் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக, லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதால், இன்று முழு போட்டி கன்ஃபார்ம்!
We had a spot of rain in the morning, but the skies have cleared up now 🌤️
Here's hoping we don't need these for the rest of the day! #CWC19 pic.twitter.com/A1QmNt0OCA
— Cricket World Cup (@cricketworldcup) 14 July 2019
கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கிலாந்தில் நடந்து வந்த உலகக் கோப்பை 2019 தொடரின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இன்று நாம் காத்திருக்கிறோம். அது மகிழ்ச்சியான கிளைமேக்ஸா அல்லது சோகமானதா என்பதே சஸ்பென்ஸ்!. திரில்லர் நிறைந்த அந்த சஸ்பென்ஸின் ஒவ்வொரு அசைவுகளையும், உங்களுக்காக ஐஇ தமிழ் மூலம் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியுடன் வழங்க காத்திருப்பது நான் அன்பரசன் ஞானமணி!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights