ICC World Cup 2019, England Vs New Zealand Score Updates: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயன் மோர்கன் தலைமையிலானஆஸ்திரேலிய அணியும் மோதின.
இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 15 ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதனால், பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.
கப்தில் – 1 ரன்…
இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது!
நீஷம் – 1 ரன்
நீஷம் – 2 ரன்கள்
நீஷம் – 2 ரன்கள்
நீஷம் – 6
2 ரன்கள்
வைட்
நியூசிலாந்து அணியில் கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கியுள்ளனர். பந்து வீசுவது ஜோஃப்ரா ஆர்ச்சர்
பட்லர் – 4 ரன்கள்…
இங்கிலாந்து மொத்தமாக சூப்பர் ஓவரில் அடித்த ரன்கள் 15.
பட்லர் – 2 ரன்கள்
ஸ்டோக்ஸ் – 1 ரன்
ஸ்டோக்ஸ் – 4
ஜோஸ் பட்லர் – 1 ரன்
பென் ஸ்டோக்ஸ் – 3 ரன்கள்
சூப்பர் ஓவரில், பென் ஸ்டோக்ஸ் – ஜோஸ் பட்லர் களமிறங்கியுள்ளனர். போல்ட் பந்து வீசுகிறார்.
ரன் அவுட்… ஆட்டம் டிரா… இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுக்க, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தது. இதனால், சூப்பர் ஓவர் கடை பிடிக்கப்பட உள்ளது.
1 ரன், அடில் ரஷித் ரன் அவுட்
6 ரன்கள்
போல்ட் ஓவரில் ஸ்டோக்ஸ் சிக்ஸ்!!
0 ரன்கள்
0 ரன்கள்
நீஷம் வீசிய 48.6வது ஓவரில், 0 ரன்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வெளியேறினார்.
லியம் பிளங்கட் 10 ரன்களில் நீஷம் ஓவரில் கேட்ச் ஆக, 7வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து
218-6
48 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை.
க்றிஸ் வோக்ஸ் அவுட்!
இதோ, ஒவ்வொரு ஓவரும் உங்கள் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தப் போகிறது!. க்றிஸ் வோக்ஸ் 2 ரன்களில் அவுட்! ஆறாவது விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து.
இதோ, மீண்டும் நியூசிலாந்து டிராக்கில் வந்துள்ளது.
இம்முறை அவுட்டாகி இருப்பது ஜோஸ் பட்லர். பெர்கியூசன் ஓவரில், பட்லர் தூக்கி அடிக்க, சவுதியின் அபார கேட்ச்சால் 59 ரன்களில் வெளியேறினார்.
பட்லர் அரைசதம்!!
விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்திய ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்திருக்கிறார். இங்கிலாந்து வெற்றிப் பெற்றுவிட்டால், வாழ்நாள் முழுவதும் இந்த இன்னிங்சை அவரால் மறக்க முடியாது. அதேபோல், பென் ஸ்டோக்ஸ் 81 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தியிருக்கிறார்.
170-4
40 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. சரியாக, 60 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிப் பெற 72 ரன்கள் தேவை!
அடடா இதுவல்லவா இறுதிப் போட்டி!
ஒவ்வொரு ஓவருக்கும் பிரஷர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 36வது ஓவரில், ஒரு எல்பிடபிள்யூ ரிவியூ சென்று நியூசிலாந்து அதை வீணடித்தது. ஸ்டோக்ஸ் – பட்லர் தலா 30 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி வருகின்றனர். உண்மையில் அவர்களது பார்ட்னர்ஷிப்பின் மதிப்பு மிக அபாரமானது.
90 பந்துகளில் 101 ரன்கள்!!
ஆம்! இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல, 90 பந்துகளில் 101 ரன்கள் தேவை. பெருவாரியான ரசிகர்களின் Prediction இங்கிலாந்து பக்கமே உள்ளது. நியூசிலாந்து மீண்டு வருமா? கையில் ஆறு விக்கெட்டுடன் இங்கிலாந்து…
33 ஓவர்கள் முடிவில், நான்கு விக்கெட் இழப்பிற்கு 129 எடுத்துள்ளது இங்கிலாந்து. ஜோஸ் பட்லர் – பென் ஸ்டோக்ஸ் லோ ஆர்டர் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்தின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது.
இங்கிலாந்தின் மிக முக்கிய விக்கெட்டான ஜோ ரூட்டை காலி செய்த கிராண்ட் ஹோம், தனது 10 ஓவர்களையும் முடித்துவிட்டார். 10 ஓவர்கள் வீசி, 2 மெய்டன் எடுத்து, ஒரு விக்கெட் கைப்பற்றி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.
26 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து நான்கு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. லோ ஸ்கோரிங் கேம் என்றாலும் கூட, இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருப்பதால், யாருக்கு வெற்றி என்பதில் சஸ்பென்ஸ் இன்னமும் நீடிக்கிறது.
அடக்கடவுளே என்ன கேட்ச் இது!
நீஷம் ஓவரில், மோர்கன் தூக்கி அடிக்க, பழைய பூஸ்ட் விளம்பரத்தில் பாய்ந்து, பறந்து வந்து சச்சின் கேட்ச் பிடிப்பது போல, பெர்கியூசன் பாய்ந்து வந்து பிடிக்க, கேப்டன் மோர்கன் 9 ரன்களில் அவுட்!
அனைவரும் பேர்ஸ்டோ அவுட்டான பிறகே, ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்புவது போல் இருக்கிறது என்கின்றனர். இல்லை… எப்போது 10 ரன்களுக்குள் ஜோ ரூட் அவுட்டனாரோ, அப்போதே நியூசிலாந்து பக்கம் வெற்றிக் காற்று மணிக்கு 150 கி.மீ.வேகத்தில் வீசத் தொடங்கிவிட்டது எனலாம்.
இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? 36 ரன்களில் பேர்ஸ்டோ அவுட்!
பெர்கியூசன் ஓவரில் ஜானி பேர்ஸ்டோ இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, இங்கிலாந்து தனது மூன்றாவது விக்கெட்டை இழந்திருக்கிறது. அதுவும், 20 ஓவருக்குள்ளாகவே!
யாரும் எதிர்பார்க்காத வகையில், டி கிராண்ட் ஹோம் ஓவரில், 30 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட், லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து தனது மிக முக்கியமான விக்கெட்டை இழந்திருக்கிறது. உண்மையில், நியூசிலாந்தின் கையே இப்போது ஓங்கி இருக்கிறது.
22 பந்துகளில் 3 ரன் மட்டுமே எடுத்து, மரண கட்டை போட்டிருக்கிறார் ஜோ ரூட். என்ன மைண்ட் செட் பாருங்க!! ஏனெனில், நியூசிலாந்தின் பந்துவீச்சு பற்றி இங்கிலாந்துக்கு நன்றகாவே தெரியும். இந்தியா பட்ட அவஸ்தையை அவர்களும் பார்த்திருப்பார்கள் தானே!!
ஜேசன் ராயை விரைவில் அவுட்டாக்கிவிட்டால் இங்கிலாந்தின் ரன் ரேட் குறையும். அவர்களது கான்ஃபிடன்ட்டும் உடையும் என்ற நியூசிலாந்தின் பிளான் ஏ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 12 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 39/1.
ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தபிறகு, இங்கிலாந்து எட்டு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ நிதானமாக ஆடி, லூஸ் பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டுகின்றனர்.
எதிரணி பவுலர்களை பீதியில் உறைய வைத்துக் கொண்டிருந்த இங்கிலாந்து ஓப்பனர் ஜேசன் ராய், 17 ரன்களில் மேட் ஹென்றி ஓவரில் அவுட் சைட் எட்ஜ் ஆகி, கீப்பர் கேட்ச் ஆனார். முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
இன்றைய தேதியில், உலகின் மிக ஆபத்தான தொடக்க வீரர்களான இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ – ஜேசன் ராய் ஜோடி களமிறங்கி உள்ளது.
50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல 242 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரைசதத்தை நெருங்கிய டாம் லாதம், 56 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து, க்றிஸ் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இது நியூசிலாந்தின் ஏழாவது விக்கெட்டாகும். தன்னுடைய பேட்டிங் வலிமைக்கு ஏற்ப எவ்வளவு அடிக்க முடியுமோ, முடிந்தளவு அதை செய்திருக்கிறது நியூசிலாந்து. இன்னும் ஒரு ஓவரே மீதமுள்ளது.
27 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த கிராண்ட்ஹோம், வோக்ஸ் பந்தில் கேட்ச்சாக, நியூசிலாந்து தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது.
பெரும் போராட்டத்திற்கு பிறகு 200 ரன்களை கடந்திருக்கிறது நியூசிலாந்து. மார்க் வுட் ஓவரில், டாம் லாதம் அடித்த சிக்ஸ் தான், நியூசிலாந்து ரசிகர்களுக்கு ரொம்ப நேரத்திற்கு பிறகு கிடைத்த ஒரே டானிக்!
45 ஓவர்கள் முடிவில், 211-5
43 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதமும், கிராண்ட்ஹோமும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும், 50 ஓவர்கள் வரை நிற்கும் பட்சத்தில், நியூசிலாந்து மேற்கொண்டு 50 – 60 ரன்கள் வரை அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மோசமான ஷார்ட்டை தேர்வு செய்து அடித்து, லியம் பிளங்கட் ஓவரில், 19 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார் ஜிம்மி நீஷம். நியூசிலாந்து தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்தது.
கோலின் டி கிராண்ட்ஹோம் களத்தில்…
4 விக்கெட்டுகளை இழந்த பிறகு, களத்தில் நிற்பது நீஷம், லாதம் எனும் இரு ஹிட்டர்கள். இருவருமே இடது கை ஆட்டக்காரர்கள். இதனால், பீல்டிங்கை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம், இங்கிலாந்து கேப்டனுக்கு இல்லை. பவுலிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்த தடையை மீறி, இருவரும், அணிக்கு பெரும் பங்களிப்பு ஆற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
நியூஸி., 38 ஓவர்கள் முடிவில் 165-4
நியூசிலாந்து அணி 93 பந்துகளுக்கு பிறகு 34.4வது ஓவரில் தான் முதல் பவுண்டரியை அடித்திருக்கிறது. ஸ்டோக்ஸ் ஓவரில், நீஷம் தான் அந்த சாதனையை படைத்துள்ளார்.
எது நடக்கக் கூடாதோ, எது நன்றாகவே நடக்கிறது. சீனியர் வீரர் ராஸ் டெய்லர், மார்க் வுட் ஓவரில் எல்பி ஆகி 15 ரன்களில் வெளியேறினார். ரிவியூ வாய்ப்பு இல்லாததால், அவர் வெளியேற நேரிட்டது. ஆனால், அதன்பிறகு அந்த பந்தை செக் செய்த போது, பந்து ஸ்டம்ப்பை தாக்காமல் மேலே சென்றது தெரிய வர….
அப்புறம் என்ன தலையில துண்ட போட வேண்டியது தான்!
31 ஓவர்களில் நியூசிலாந்து 130-3. இனி நியூசிலாந்து செய்ய வேண்டியவை,
மேற்கொண்டு அடுத்த 10 ஓவர்களுக்கு விக்கெட் விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
40 ஓவர்களுக்கு 180 எனும் நிலையை, இதே மூன்று விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு எட்ட முயற்சிக்க வேண்டும்.
கடைசி பத்து ஓவர்களில் அட்லீஸ்ட் 80 ரன்கள் அடிக்க வேண்டும்.
நியூசிலாந்து 29 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. எங்கிருந்தோ வந்து பொசுக்கென அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை பிளங்கட் கைப்பற்ற, நியூஸி., ஆட்டம் கண்டு போயிருக்கிறது. தற்போது களத்தில் ராஸ் டெய்லர், டாம் லாதம்…
நிதானமான ஆடி அரைசதம் அடித்த நிகோல்ஸ், லியம் பிளங்கட் ஓவரில், 55 ரன்களில் திக் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். நியூசிலாந்து மூன்றாவது விக்கெட்டை இழந்தது.
71 பந்துகளை சந்தித்த நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் அரைசதம் அடித்து, அணியில் தனது இருப்புக்கு சரியான நேரத்தில் காரணம் கற்பித்திருக்கிறார். சீனியர் வீரர் ராஸ் டெய்லருடன் அவர் அமைக்கப் போகும் பார்ட்னர்ஷிப்பே, நியூசிலாந்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது.
நியூசிலாந்து தனது கேப்டனின் விக்கெட்டை இழந்துவிட்டது. லியம் பிளங்கட் ஓவரில், அவுட் சைட் எட்ஜ் ஆகி வில்லியம்சன் 30 ரன்களில் வெளியேற, நியூசிலாந்து தனது 2வது விக்கெட்டை பறிகொடுத்தது.
கேன் வில்லியம்சன் மற்றும் நிகோல்ஸின் நிதானமான பேட்டிங்கால் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட நியூசிலாந்து, வெற்றிகரமாக அதே ஒரு விக்கெட்டுடன் 100 ரன்களைக் கடந்தது. 22 ஓவர்கள் முடிவில் 102/1. இங்கிருந்து இரு பேட்ஸ்மேன்களும், அடுத்த கியருக்கு மாறினால் நலம்.
ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்திருக்கிறார்.
569 – கேன் வில்லியம்சன் (2019)*
548 – மஹேலா ஜெயவர்தனே (2007)
539 – ரிக்கி பாண்டிங் (2007)
507 – ஆரோன் ஃபின்ச் (2019)
ஹென்றி நிகோல்ஸ் 50 பந்துகளை சந்தித்ததே நியூசிலாந்துக்கு மிகப்பெரிய பூஸ்ட் தான். இனி, நிச்சயம், நியூசிலாந்து 280 ரன்களைக் கடந்து இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது. சுத்தமாகவே ஃபார்மில் இல்லாத ஒரு பேட்ஸ்மேனால் 50 ரன்களை சந்திக்க முடிகிறது எனில், ராஸ் டெய்லர், டாம் லாதம், நீஷம் போன்றவர்கள் நிச்சயம் இன்று அரைசதமே அடிக்கலாம்.
கப்தில் விக்கெட்டுக்கு பிறகு மிகவும் நிதானமான, குழப்பமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து, 13.4வது பந்தில் அரைசதம் எட்டியது.
இந்த 50, 350-ஆக வாழ்த்துகள்!!
இந்த விதிப்படி தான், கப்தில் விக்கெட்டை இழந்த பிறகு நியூசிலாந்து விளையாடி வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன் எப்பேற்பட்ட பதட்டமான சூழ்நிலையையும் சகஜமாக்கிவிடுகிறார். இறுதிப் போட்டி போன்ற பதட்டமே இல்லாமல் நியூசிலாந்து ஆடிவருகிறது.
கிரேட்!!
10 ஓவர்கள் முடிவில் நியூஸி., 33/1
இது உண்மையில் மோசமான ஸ்கோர் இல்லை. ஆனால், அந்த ஒரு விக்கெட் வீழ்ந்ததையும் தவிர்த்திருக்கலாம். தற்போது களத்தில் வில்லியம்சன் இருப்பது, எதிர் முனையில் இருக்கும் நிகோல்ஸ்-க்கு பெரிய சப்போர்ட் என்றால், அதில் வியப்பேதும் இல்லை.
2015: 547 ரன்கள்; ஆவரேஜ் 68.37; ஸ்டிரைக் ரேட் 104.58; அதிகபட்சம் 237* – அதிக ரன்கள் குவித்த நியூஸி., வீரர்
2019: 186 ரன்கள்; ஆவரேஜ் 20.66; ஸ்டிரைக் ரேட் 84.16; அதிகபட்சம் 73*
கப்தில் அவுட்!! நியூசிலாந்து மிக மிக முக்கியமான விக்கெட்டை இழந்திருக்கிறது. புதிய பந்தில் அச்சுறுத்தும் க்றிஸ் வோக்ஸ் ஓவரிலேயே எல்பி டபிள்யூ ஆகி 19 ரன்களில் வெளியேறி இருக்கிறார் மார்ட்டின் கப்தில்.
கேப்டன் கேன் வில்லியம்சன் இன்…
மார்டின் கப்தில் தனது பழைய டச்சிற்கு வருவது போல் தெரிகிறது. இது இப்படியே போனால், அது இங்கிலாந்துக்கு பேராபத்து! அவர் நியூசிலாந்தின் ரோஹித் ஷர்மா என்பதை மறக்க வேண்டாம்.
5 ஓவர்கள் முடிவில், நியூஸி., 24/0.
புதிய பந்தில் க்றிஸ் வோக்ஸ் மிக அபாரமாக டெலிவரி செய்கிறார் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம். வோக்ஸ் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில், நிகோல்ஸ் எல்பியாக, கள நடுவரும் அவுட் கொடுக்க, ரிவியூ சென்ற நிகோல்ஸ் கிரேட் எஸ்கேப் என்கிறது வரலாறு!!
நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருப்பது அவர்களின் முதல் வெற்றி எனலாம். ஆனால், இப்போது பிரச்சனை என்னவெனில், அச்சுறுத்தம் மேகமூட்டங்கள் தான். எந்நேரமும் மழை பெய்யும் என்கிற உணர்வை மனதில் ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில், பேட்டிங் தேர்வு செய்தது நல்ல முடிவு தானா என்பதை, இனி வரும் ஒவ்வொரு நிமிடமும் தான் முடிவு செய்யும்
வழக்கம் போல் நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஹென்ரி நிகோலஸ் – மார்டின் கப்தில் ஜோடி களமிறங்கியது.
எல்லாம் சரி… வழக்கம் போல உடனே அவுட்டாகிட்டு வந்துடாதீங்க!!
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(c), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w), க்றிஸ் வோக்ஸ், லியம் பிளங்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து பிளேயிங் XI:
மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோலஸ், கேன் வில்லியம்சன்(c), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லாதம்(w), கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லோகி ஃபெர்கியூசன்
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இன்றைய இறுதிப் போட்டியின் போது எப்போது வேண்டுமானாலும் மழை குறுக்கீடு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரெயின், ரெயின் கோ அவே’ என்றெல்லாம் பாட முடியாது… உனக்கு வெட்கம், மானம், ரோஷம் இருந்தா இந்தப் பக்கம் வந்துடாத.. புரியுதா!
போ, அங்குட்டு சென்னை பக்கம் போ…
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் டாஸ், 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை மழை பெய்ததால், டாஸ் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, பிற்பகல் 2.45 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்த உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்கு போட்டியிலும், முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது
இங்கிலாந்தை 64 ரன்கள் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
நியூசிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
இன்றைய இறுதிப் போட்டிக்காக பெவிலியனில் தங்களுக்கு ஏற்ற இடத்தைப் பிடிக்க, ஜென்டில்மேன் ரசிகர்கள் முண்டியடித்து ஓடும் காட்சி. அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே!!
டைட்டில் பார்த்தவுடன் ஜெர்க் ஆக வேண்டாம். இறுதிப் போட்டி நடைபெறவுள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று காலை லேசான மழை பெய்திருக்கிறது. ஆனால், அதன்பிறகு மழை நின்று மேகங்களும் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக, லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதால், இன்று முழு போட்டி கன்ஃபார்ம்!
கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கிலாந்தில் நடந்து வந்த உலகக் கோப்பை 2019 தொடரின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இன்று நாம் காத்திருக்கிறோம். அது மகிழ்ச்சியான கிளைமேக்ஸா அல்லது சோகமானதா என்பதே சஸ்பென்ஸ்!. திரில்லர் நிறைந்த அந்த சஸ்பென்ஸின் ஒவ்வொரு அசைவுகளையும், உங்களுக்காக ஐஇ தமிழ் மூலம் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியுடன் வழங்க காத்திருப்பது நான் அன்பரசன் ஞானமணி!!