Advertisment

Asia Cup Pakistan vs Bangladesh: பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது

Pakistan vs Bangladesh: நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதுவது உறுதி ஆனது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan vs Bangladesh Live Cricket Score Streaming

Pakistan vs Bangladesh Live Cricket Score Streaming

Pakistan vs Bangladesh Cricket Score Streaming, Pak vs Ban Asia Cup 2018 Cricket Score: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில்,  சூப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. இதில் வங்கதேசம் நிர்ணயித்த 239 ரன்கள் இலக்கை எட்டிப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதுவது உறுதி ஆனது.

Advertisment

முன்னால் தரப்பட்ட செய்தி:

ஏற்கனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்ட நிலையில், இன்று வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆகையால், இது கிட்டத்தட்ட அரையிறுதிப் போட்டி என்றே சொல்லலாம்.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டசா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஷகிப் அல் ஹசனுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதில் மொமினுல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், சௌமியா சர்கார், ருபெல் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் ஒரேயொரு மாற்றமாக, இந்திய அணிக்கு எதிராக சொதப்பிய முகமது ஆமிருக்கு பதிலாக, ஜுனைத் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

Pakistan vs Bangladesh Live Cricket Score Streaming: இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Asia Cup 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment