இதை கவனிச்சீங்களா? டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்த மறுத்த மோடி; நெகிழும் ரசிகர்கள்

பிரதமர் மோடியின் இந்த அசாத்திய செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் இந்த அசாத்திய செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi Decides Against Touching T20 WC Trophy Gesture Wins fans Hearts Tamil News

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. 

மோடியுடன் சந்திப்பு 

Advertisment

இந்திய அணியின் இந்த வெற்றி மூலம், 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தாலும், பார்படாஸில் பெரில் புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று புயல் ஜமைக்காவை நோக்கி நகர்ந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று புதன்கிழமை  இந்தியா புறப்பட்டனர். 

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று காலை 6 மணிக்கு தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் திரளாக குவிந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, 11:00 மணியளவில் இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

உலகக்கோப்பையை கையில் ஏந்த மறுத்த மோடி

இந்த நிலையில், பிரதமர் மோடி டி20 உலகக் கோப்பை கோப்பையுடன் இந்திய அணி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது, ​​நம்பமுடியாத காட்சி ஒன்று வெளிப்பட்டது. மோடி டி20 உலகக் கோப்பை கோப்பையை தனது கையால் தொடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் கைகளை மட்டுமே அவர் பிடித்து இருந்தார். 

Advertisment
Advertisements

டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் மட்டும் தங்கள் கைகளில் கோப்பையை பிடிக்க, பிரதமர் மோடி அவர்களின் கைகளைப் பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அசாத்திய செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

T20 World Cup 2024 Pm Modi Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: