Advertisment

ஐபிஎல் Anthem 2018! 'Best vs Best' பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இந்த பிராண்ட் வேல்யூ உயர்வு விகிதம் ஐபிஎல் நிர்வாகம் திருப்திப்படும் அளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐபிஎல் Anthem 2018! 'Best vs Best' பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

ANBARASAN GNANAMANI

Advertisment

11வது ஐபிஎல் சீசன், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐபிஎல் திருவிழா, மே மாதம் 27ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

லீக் போட்டிகள் மே 20ம் தேதியோடு முடிவடைகிறது. மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.

எட்டு அணிகளுக்குமான கேப்டன்களும் நியமிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில், ஐபிஎல் 2018ன் ஆந்தம் வெளியிடப்பட்டுள்ளது. 'Best vs Best' என்ற அடைமொழியோடு இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, பெங்காலி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இந்த ஆந்தம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தென் ஆப்பிரிக்காவின் திரைப்பட இயக்குநர் டான் மேக் இயக்கி இருக்கிறார். ராஜிப் வி பால்லா மற்றும் சித்தார்த் பசூர் ஆகியோர் இப்பாடலுக்கு இசையமைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிசிசிஐ முதன்முறையாக இணைந்து, இந்த ஐபிஎல் 2018 ஆந்தமை உருவாக்கியுள்ளன. இந்த இரு பெரும் ஆளுமைகளை குறிக்கும் வகையிலையே Best vs Best என்று ஆந்தமிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கிரிகெட்டை பார்க்காதவர்களை கூட, பார்க்க வைப்பதே இந்த 'Best vs Best' பிரச்சாரத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது ஐபிஎல் தான். பணம் கொழிக்கும் இந்த லீக் மூலம் பிசிசிஐ சம்பாதிக்கும் தொகை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில் களம் காணுகின்றன. ஜனவரி 27, 28ம் தேதி வீரர்கள் ஏலம் முடிந்திருக்கும் நிலையில், இரு அணிகளும் தங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த வீரர்களை கொண்டு அணியை கட்டமைத்துள்ளன.

பொதுவாக ஐபிஎல் பிராண்ட் மதிப்பானது ஸ்பான்சர்ஷிப், ரசிகர்களின் தொடர் ஆதரவு, சோஷியல் மீடியா, பிரபலங்கள், விளையாட்டில் காட்டப்படும் செயல்திறன், சந்தைப்படுத்துதல், முன்னணி வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக 2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய போது, அதன் பிராண்ட் வேல்யூ, அதற்கு முந்தைய ஆண்டை விட சரிந்து காணப்பட்டது. அதாவது, 2014ல் 72 மில்லியன் டாலராக இருந்த அதன் பிராண்ட் வேல்யூ, 2015ல் 67 மில்லியன் டாலராக சரிந்தது. அதுமட்டுமின்றி, 2014ல் ஐபிஎல் அணிகளில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட அணிகளில் முதலிடத்தில் இருந்த சென்னை, 2015ல் ஐபிஎல் தொடர் முடிந்த பின் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சூதாட்ட புகாரில் சிக்கியதே இதற்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. இந்த சறுக்கலை ஐபில் நிர்வாகம் வேறுவழியின்றி பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், இங்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், அதே ஆண்டில் (2015), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஃபாலோ செய்த மொத்த ரசிகர்களின் எண்ணிக்கை 11.8 மில்லியனை தொட்டதால், சமூக தளங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பர்.1 அணி என்ற பெருமையைப் பெற்றது.

இதன் மூலம், மற்ற விஷயங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ குறைந்தாலும், ரசிகர்களின் விடாப்பிடியான ஆதரவு மற்ற அணிகளை பிரமிக்க வைத்தது. சக அணிகளை மட்டுமின்றி, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அதன் அணிகளின் பிராண்ட் வேல்யூ புள்ளி விவரத்தை அலசும் ‘American Appraisal India and Duff & Phelps’ எனும் நிர்வாகத்தையும் சென்னை அணி பிரமிக்க வைத்தது. இவ்வளவு சறுக்கல்களுக்கு மத்தியிலும் எப்படி இந்த அணியை மட்டும் ரசிகர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தங்களது ஆச்சர்யத்தை அந்நிறுவனம் வெளிப்படுத்தி இருந்தது. ஐபிஎல் நிர்வாகம் இந்த புள்ளி விவரங்களை உற்று நோக்கியது.

இதைத் தொடர்ந்து, சூதாட்ட புகாரில் சிக்கிய பிறகு குறைந்த ஒட்டுமொத்த ஐபிஎல்லின் பிராண்ட் வேல்யூ, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு விதித்த தடைக்குப் பின் 2016ல் 19 சதவிகிதமாக உயர்ந்தது. 2017ல் 26 சதவிகிதமாக உயர்ந்தது. இருப்பினும், இந்த உயர்வு விகிதம் ஐபிஎல் நிர்வாகம் திருப்திப்படும் அளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. தற்போது தடை காலம் முடிந்து மீண்டும் இரு அணிகளும் களமிறங்க உள்ளதால், அந்த எதிர்பார்ப்பை பயன்படுத்தி, ஒட்டுமொத்த ஐபிஎல்லின் பிராண்ட் வேல்யூவை உச்சக்கட்டத்திற்கு கொண்டுச் சென்றுவிட வேண்டும் என்பதில் ஐபிஎல் நிர்வாகம் மிகத் தீவிரமாக உள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மிக அதீத எதிர்பார்ப்போடு, தங்கள் அணிகளின் கம்பேக்கை எதிர்பார்த்து காத்திருப்பதால், அந்த எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஐபிஎல் முடிவு செய்துள்ளது.

ஆக! Best vs Best என்ற பிரச்சாரத்தை, 'சென்னை சூப்பர் கிங்ஸ் பேன்ஸ் எதிர்பார்ப்பு' vs 'ராஜஸ்தான் ராயல்ஸ் பேன்ஸ் எதிர்பார்ப்பு' என்பதை மனதில் வைத்தே ஐபிஎல் உருவாக்கி இருக்கவேண்டும் என்பதே நமது கருத்து!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment