worldcup 2023 | indian-cricket-team | hardik-pandya: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விளையாடி வந்த ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து முழுவதும் விலகுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்திற்குப் பிறகு மீண்டும் வந்துள்ள 27 வயதான பிரசித் கிருஷ்ணா, இந்தியாவுக்காக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளது சரியான முடிவா? அல்லது வேறு விதமாக இந்திய நிர்வாகம் சிந்தித்து இருக்கலாமா? என்று இங்கு அலசலாம்.
பெரிய தொடர்களில் அதிகம் ஆடவில்லை
பிரசித் கிருஷ்ணா முதுகு காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாக அணியில் இருந்து விலகி இருந்தார். தொடர்ச்சியான காயத்தில் இருந்து மீண்டு வரும்போது அவர் அனுபவித்த சோதனையைப் பற்றி அவர் பேசியுள்ளார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் அணிக்கு திரும்ப வந்ததிலிருந்து, அணியில் அதிகம் இடம்பெறவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/TCCsVIJoxrqGy9JifR49.jpg)
அவர் அயர்லாந்திற்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடினார், பின்னர் முறையே வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றார். அந்த போட்டிகளில் அவர் சிறப்பாக பந்துவீசி இருந்தார். ஆனால், போதுமான அளவு சோதிக்கப்படவில்லை.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகா அணிக்காக பிரசித் மாறிய நிலையில், போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. அவர் தனது மாநிலத்திற்காக விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுக்கவில்லை. மேலும் அந்த இரண்டு ஆட்டங்களில் நான்கு ஓவர்களின் ஒதுக்கீட்டை கூட முடிக்கவில்லை.
பேக்-அப் வீரராக ஷர்துல் தாக்கூர்
ஹர்திக்கின் காயம் ஏற்கனவே பிரசித்தை தவிர ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான வாய்ப்பை கொடுத்தது. அதனால், முகமது ஷமி ஷர்துல் தாக்கூரின் இடத்தில் இந்திய லெவன் அணிக்குள் நுழைந்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இதுவரை விளையாடி மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டல் விடுத்து வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/3Pssgue3uk92ljedwPFH.jpg)
இதனால், ஷர்துல் தாக்கூர் பெஞ்சில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் யாருக்கேனும் மூச்சுத் திணறலால் ஓய்வு அல்லது நிலைகளைச் சமாளித்தாலோ ஆடும் லெவன் அணியில் இடம்பெறலாம்.
தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு பேக்-அப் ஏற்கனவே இருப்பதால், பிரசித் அணியில் இடம் பெற வேண்டிய அவசியம் உள்ளதா? என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது. அவர் ஒருவேளை ஒட்டுமொத்தமாக தாக்கூரை விடவும் சிறந்தவராக இருந்தாலும், லீக் கட்டத்தில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. மேலும் இந்தியா அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது.
ஆல்ரவுண்டர்கள் பற்றாக்குறை
பிரசித் கிருஷ்ணாவிடம் திறமையான பல விஷயங்கள் உள்ளன. ஆனால், பேட்டிங் ஆடுவது அவற்றில் ஒன்றல்ல. அவர் விளையாடும் பெரும்பாலான அணிகளில் நம்பர். 11 வது இடத்தில் தான் களமிறங்குகிறார். மேலும் அவர் எப்போதாவது லோ மிடில்-ஆடரில் களமிறங்கினால் அவரிடமிருந்து அதிக ரன்களை இந்தியா எதிர்பார்க்க முடியாது.
தற்போதை நிலையில், இந்திய அணியில் ஆல்-ரவுண்டர்களின் எண்ணிக்கை தான் குறைவாக உள்ளது. ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே ஆடும் லெவன் அணியில் உள்ள ஒரே ஆல்-ரவுண்டராக உள்ளார். ஜடேஜாவுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அணி ரவிச்சந்திரன் அஷ்வினை நம்பர் 7ல் விளையாட வேண்டும். மேலும் சில கூடுதல் உதவிகளை வழங்க ஷர்துல் தாக்கூரை சேர்க்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/D7B3tbU4tPEe7yb181Es.jpg)
முன்பு, அக்சர் படேல் இந்திய உலககோப்பை அணியில் முக்கி வீரராக இருந்தார். ஆனால், ஆசிய போட்டியில் அவருக்கு காயம் ஏற்படவே அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது அக்சர் படேல் சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடி வருகிறார். அவர் இதுபோன்ற பெரிய போட்டிகளுக்கு தகுதியானவர். மேலும் ஜடேஜாவுடன் அவரது உடல்தகுதி சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், மற்றொரு ஆல்-ரவுண்ட் வாய்ப்பைப் பெற்றிருப்பதன் மூலம் இந்தியா நிச்சயமாக பயனடைந்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“