முத்தரப்பு டி20 தொடர்: முடிவை முன்னரே தீர்மானித்து டிக்கெட் விற்ற பிரேமதாசா ஸ்டேடியம்!

பங்களாதேஷ் தான், ஜெயிக்குறதுக்கு முன்னாடியே ஆடுறானுங்க-னா, இவனுங்க பைனல் வரதற்கு முன்னாடி டிக்கெட்டே அடிச்சிட்டானுங்க!

ரசிகர்களின் ஆர்வம் அதிகமில்லாமல் தொடங்கிய நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடர், ரசிகர்களை ஏகோபித்தமாக திருப்திப்படுத்தி முடிந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் படுமொக்கையாய் முடிய, இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 214 ரன்களை சேஸிங் செய்த பின்னர், தொடர் மீது அனைவரது பார்வையும் விழுந்தது.

அதன்பின், ஒவ்வொரு ஆட்டமும் சிறப்பாகவே அமைய, இறுதிப் போட்டி உட்பட கடைசி இரு போட்டிகள் மட்டும் வேற லெவல் கிரிக்கெட். இந்த இரண்டிலும் வங்கதேச அணியே முக்கிய பங்கு வகித்தது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது ‘பக்கா கமர்ஷியல்’ அணியாக உருமாறி வருகிறது. அதாவது, தாங்கள் விளையாடும் போட்டிகளில் எப்படியாவது பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களை திருப்திப்படுத்திவிடுகிறது. இதுதானே, அதிக பொருட்செலவு செய்து கிரிக்கெட்டை நடத்தும் சங்கங்களுக்கும் தேவை.

இது ஒருபுறமிருக்க, முத்தரப்பு தொடரின் அனைத்துப் போட்டிகளும் நடந்த கொழும்புவில் உள்ள பிரேமதாஸா கிரிக்கெட் ஸ்டேடியம், முன்கூட்டியே எந்தெந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதை தீர்மானித்திருக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது, இறுதிப் போட்டிக்கான கார் பார்க்கிங் டிக்கெட்டை முன்னரே அச்சடித்த பிரேமதாஸா ஸ்டேடிய நிர்வாகம், அதில் இந்தியாவும், இலங்கையும் மோதும் போட்டி என்று அச்சடித்துள்ளது.

பங்களாதேஷ் தான், ஜெயிக்குறதுக்கு முன்னாடியே ஆடுறானுங்க-னா, இவனுங்க பைனல் வரதற்கு முன்னாடி டிக்கெட்டே அடிச்சிட்டானுங்க!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close