பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், அர்ஜுனா விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறுவோரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது. அதில், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த தேர்வுக் குழுவினர், தங்களது அறிவிப்பை அண்மையில் வெளியிட்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 17 பேர் அர்ஜுனா விருதுக்கும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியா, முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
Hockey player Sardar Singh and Paralympian Devendra Jhajharia conferred with Rajiv Gandhi Khel Ratna Award 2017 by President Ram Nath Kovind pic.twitter.com/vt1BLYR1ij
— ANI (@ANI) 29 August 2017
இந்நிலையில், அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
Delhi: President Ram Nath Kovind conferred #ArjunaAward on para athlete Thangavelu Mariappan at Rashtrapati Bhawan pic.twitter.com/Fn2JWqU2iN
— ANI (@ANI) 29 August 2017
தேவேந்திர ஜஹாரியா, முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். அதேபோல், பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர், கோல்ஃப் வீரர் சவ்ராஸியா உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருதுகளை வழங்கியும் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
Cricketer Harmanpreet Kaur and Golfer SSP Chawrasia conferred with Arjuna Award by President Ram Nath Kovind pic.twitter.com/bt3TCfspz6
— ANI (@ANI) 29 August 2017
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் கடந்து ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.