புரோ கபடி 2017: தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!

குஜராத் ஃபார்ச்சூன் ஜயண்ட்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. இரு அணிகளும் 27-27 என்ற புள்ளிகளை பெற்தையடுத்து போட்டி ‘டை ‘ ஆனது....

புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன்(2017), கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் அறிமுகம் ஆகின.

ஹைதராபாத்தில், குரூப் ஏ-வில் நடைபெற்ற 9-வது போட்டியில் குஜராத் ஃபார்ச்சூன் ஜயண்ட்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற போட்டியில் இரு அணிகளும் 27-27 என்ற புள்ளிகளை பெற்றது. இதனால், இப்போட்டி டை ஆனது.

இதைத்தொடர்ந்து, குரூப் பி-யில் நடைபெற்ற 10-வது போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், 24-30 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. இதனால், தெலுகு டைட்டன்ஸ் தனது சொந்த ஊரில் 4-வது தோல்வியை தழுவியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close