புரோ கபடி லீக் 2017: திரிலிங்கான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி 2017 லீக் போட்டிகளில் திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

புரோ கபடி 2017 லீக் போட்டிகளில் திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. முதலில், டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. அடுத்தடுத்து, இப்போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்கவே, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேச அணிகள் களம் கண்டன.

இதையடுத்து, மொத்தம் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 5-வது புரோ கபடி லீக் போட்டிகள் ஹைதராபாத்தில் கோலாகலாமா தொடங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 2 முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறையும் வேண்டும்.

இந்நிலையில், 32-வது லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில், ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தபாங் டெல்லியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பரபரப்பாக நடைபெற்ற முதல் பாதி 12 – 12 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது.

அதன்பின்னர் இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் ஆதிக்கம் செலுத்தியது. 27 – 23 என தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்து வந்தது. ஆனால், அடுத்தடுத்த ரைடுகளில் டெல்லி அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் இருந்த போது தமிழ் தலைவாஸ் அணி 28- 27 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. அப்போது ரைடுக்கு சென்ற டெல்லி அணி வீரர், மூன்று புள்ளிகளை அந்த அணிக்கு சேர்த்துக் கொடுத்தார். பின்னர், ரைடு சென்ற தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒரு புள்ளி எடுத்தார்.

திரிலிங்காக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி 29 – 30 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.

×Close
×Close