Advertisment

புரோ கபடி லீக் 2017: முதலிடம் பிடித்த குஜராத் ஃபார்ச்யூன்!

புரோ கபடி லீக் 2017 தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
புரோ கபடி லீக் 2017: முதலிடம் பிடித்த குஜராத் ஃபார்ச்யூன்!

புரோ கபடி லீக் 2017 தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும், யு.பி.யோதா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் 27 - 27 என்று புள்ளிகள் பெற்றதால், ஆட்டம் 'டை' ஆனது.

Advertisment

பாட்னா பைரேட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பர்தீப் நர்வால் 9 புள்ளிகளும், மோனு கோயத் 8 புள்ளிகளும் பெற்றனர். ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை பாட்னா அணி 18 புள்ளிகளை பெற்றது. ஆனால், 6 டேக்கில் புள்ளிகள் மட்டுமே பெற்றது.

யு.பி.அணியை பொறுத்தவரை நிதின் தோமர் அதிகபட்சமாக எட்டு புள்ளிகளையும், மகேஷ் கவுட் 6 புள்ளிகளையும் பெற்றனர். ரெய்டு புள்ளிகளில் பாட்னா அணியை விட இரு புள்ளிகள் குறைவாகவே(16) யு.பி. அணி பெற்றது. ஆனால், 9 டேக்கில் புள்ளிகளைக் கைப்பற்றியது.

இதன்மூலம், பாட்னா பைரேட்ஸ் 18 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-ஆம் இடத்திலும், யு.பி., அணி 3-ஆம் இடத்திலும் உள்ளது.

இதே அரங்கத்தில் இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில், குஜராத் அணி 27 - 20 எனும் புள்ளிக் கணக்கில் வென்று, ஜெய்ப்பூருக்கு அதிர்ச்சி அளித்தது.

publive-image

குஜராத் அணியில் சச்சின் 7 புள்ளிகளை பெற்றார். ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை குஜராத் 8 புள்ளிகளும், ஜெய்ப்பூர் 9 புள்ளிகளும் பெற்றன. ஆனால், 13 டேக்கில் புள்ளிகளைக் குஜராத் அணி குவித்தது. ஜெய்ப்பூர் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், குஜராத் 23 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், ஜெய்ப்பூர் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Patna Pirates U P Yoddha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment