புரோ கபடி லீக் 2017: முதலிடம் பிடித்த குஜராத் ஃபார்ச்யூன்!

புரோ கபடி லீக் 2017 தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில்

புரோ கபடி லீக் 2017 தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும், யு.பி.யோதா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் 27 – 27 என்று புள்ளிகள் பெற்றதால், ஆட்டம் ‘டை’ ஆனது.

பாட்னா பைரேட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பர்தீப் நர்வால் 9 புள்ளிகளும், மோனு கோயத் 8 புள்ளிகளும் பெற்றனர். ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை பாட்னா அணி 18 புள்ளிகளை பெற்றது. ஆனால், 6 டேக்கில் புள்ளிகள் மட்டுமே பெற்றது.

யு.பி.அணியை பொறுத்தவரை நிதின் தோமர் அதிகபட்சமாக எட்டு புள்ளிகளையும், மகேஷ் கவுட் 6 புள்ளிகளையும் பெற்றனர். ரெய்டு புள்ளிகளில் பாட்னா அணியை விட இரு புள்ளிகள் குறைவாகவே(16) யு.பி. அணி பெற்றது. ஆனால், 9 டேக்கில் புள்ளிகளைக் கைப்பற்றியது.
இதன்மூலம், பாட்னா பைரேட்ஸ் 18 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 2-ஆம் இடத்திலும், யு.பி., அணி 3-ஆம் இடத்திலும் உள்ளது.

இதே அரங்கத்தில் இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில், குஜராத் அணி 27 – 20 எனும் புள்ளிக் கணக்கில் வென்று, ஜெய்ப்பூருக்கு அதிர்ச்சி அளித்தது.

குஜராத் அணியில் சச்சின் 7 புள்ளிகளை பெற்றார். ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை குஜராத் 8 புள்ளிகளும், ஜெய்ப்பூர் 9 புள்ளிகளும் பெற்றன. ஆனால், 13 டேக்கில் புள்ளிகளைக் குஜராத் அணி குவித்தது. ஜெய்ப்பூர் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், குஜராத் 23 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், ஜெய்ப்பூர் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close