நாளை தொடங்குகிறது 2017 புரோ கபடி லீக்! முதல் போட்டியில் களம் காணும் தமிழ் தலைவாஸ்!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள்.

புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசனின்(2017) தொடக்க விழா நாளை (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

கடந்த ஐபிஎல் தொடரின் போது, ஒவ்வொரு அணியும் தனது முதல் போட்டியில் விளையாடுகையில், போட்டி நடைபெறும் இடத்தில் அந்த அணிகளுக்கான தொடக்க விழாக்கள் நடைபெற்றது.

அதேபோல், இந்தாண்டு புரோ கபடி லீக் தொடரிலும், ஒவ்வொரு அணியும் விளாயாடும் இடங்களில் அந்த அணிகளுக்கான தொடக்க விழா அரங்கேறும்.

அதன்படி, ஹைதராபாத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் 12 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன. மூன்று மாதங்கள் வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ஹைதராபாத்தில் நாளை மாலை 6:30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு எட்டு மணிக்கு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் களத்தில் சந்திக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு இதுதான் முதல் தொடராகும். இதனால், தமிழகத்தில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள். கமல்ஹாசன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஸ்கரன் பயிற்சியாளராக செயல்படுகிறார். இந்த அணியில் அதிகபட்சமாக ரூ.63 லட்சத்துக்கு அமித் ஹூடா ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இவருடன் நட்சத்திர வீரரான அஜெய் தாக்குர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருணும் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்டார்ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD2 ஆகிய சேனல்களில் அனைத்துப் போட்டிகளையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

புரோ கபடி லீக்கின் தொடக்க விழாவை ரசிகர்கள் ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம். மேலும், இப்போட்டி குறித்த லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ietamil.com-லும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close