Advertisment

நெருங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி... எப்போது இந்திய அணி அறிவிக்கப்படும்?

இதன் காரணமாகவே வீரர்கள் அறிவிப்பை தாமதப்படுத்துவதை, பிசிசிஐ ஒரு மிரட்டல் போன்றே செய்து வருவதாக கூறப்படுகிறது.

author-image
Anbarasan Gnanamani
Apr 29, 2017 17:33 IST
நெருங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி... எப்போது இந்திய அணி அறிவிக்கப்படும்?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஏதோ ஒரு டீம் பேர் மிஸ்ஸாகுதே-னு நீங்க யோசிக்கிறது புரியுது. ஆங்...வெஸ்ட் இண்டீஸ் தானே... அந்த அணி இத்தொடருக்கு தகுதி பெறவில்லை. அதற்கு பதில், வங்கதேசம் செலக்ட் ஆகிவிட்டது.

Advertisment

சரி..விஷயத்துக்கு வருவோம். இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான வீரர்களின் விவரங்களை இந்தியாவைத் தவிர மற்ற ஏழு அணிகளும் வெளியிட்டுவிட்டன. வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டிய காலக் கெடுவும்(ஏப்ரல் 25 ,2017) முடிந்துவிட்டது. இதுதவிர, வர்ணனையாளர்கள் குழு மற்றும் தூதுவர்கள் குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிசிசிஐ இதுவரை வீரர்கள் பட்டியலில் அறிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) போட்டிகளில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தான், இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ காலதாமதம் செய்வதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

என்னதான் பிரச்சனை?

மேலும் விகடன் குறிப்பிட்டுள்ள தகவலில், ஐசிசி சில மாற்றங்களைத் தற்போது கொண்டுள்ளது. அதாவது, தனது நிதியமைப்பு மற்றும் நிர்வாகக் குழுவில் தான் ஐசிசி இந்த மாற்றங்களை செய்துள்ளது. இதனால், கிரிக்கெட் உலகில் 'தி பிக் 3' என்றழைக்கப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களின் தற்போதைய செல்வாக்கு மற்றும் வருமானத்தின் அளவுகள் கடந்த காலங்களை விட குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த புதிய மாற்றத்திற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாம். மாறாக, பிசிசிஐ மட்டும் ஆரம்பம் முதலே இந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வந்ததாம். இதனால், ஐசிசி-க்கும் பிசிசிஐக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, விராட் கோலி உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருவதால், அணி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதனால், வீரர்கள் தேர்வு தாமதமாவதாக கூறப்பட்டது. ஆனால், கிரிக்கெட் போட்டிகளால் கிடைக்கும் லாபத்தை பங்கிடுவதில், ஐசிசி ஒரு தொகையை டிமாண்ட் செய்ய, பிசிசிஐ ஒரு தொகையை முன்வைத்தது. இதன் காரணமாகவே வீரர்கள் அறிவிப்பை தாமதப்படுத்துவதை, பிசிசிஐ ஒரு மிரட்டல் போன்றே செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 24, 2017ல் துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தொடரில், பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். அப்போது, புதிய நிதியமைப்பு குறித்து விவாதம் செய்த போது, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவுடன் அந்த தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இருந்தே, நடப்பு சாம்பியனான இந்தியா வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி மூலம் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் மூலம், வருங்காலங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானம் ஈட்ட உள்ள தொகை 570 மில்லியன் டாலர்கள். ஆனால், ஐசிசி-ன் புதிய நிதியமைப்பு பகிர்வு விதிமுறைகளின்படி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிசிசிஐ பெறப்போகும் வருமானம் 290 மில்லியன் டாலர்கள் வரை குறையவுள்ளதாக தெரிகிறது. ஆனால், தற்போது பிசிசிஐ-க்கு 400 மில்லியன் டாலர்கள் வரை ஐசிசி அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இன்னும் சில நாட்களில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும்' என்றார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Bcci #Champions Trophy #Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment