நாளை பிஎஸ்எல் இறுதிப் போட்டி! எங்கு, எப்போது?

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளை பிஎஸ்எல் இறுதிப் போட்டி! எங்கு, எப்போது?

நம்மாளுங்க பலரும் 'அப்படியா! இது எப்போலேர்ந்து?' என்று கேட்கும் செய்தி தான் இது. பாகிஸ்தான் சூப்பர் லீக்.

Advertisment

ஆம்! 3வது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியும், பெஷாவர் சல்மி அணியும் மோதுகின்றன. இப்போட்டி குறித்த விவரம் இங்கே,

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி எப்போது நடைபெறுகிறது?

மார்ச்.25

Advertisment
Advertisements

எங்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது?

கராச்சி தேசிய மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. 2009ம் ஆண்டு பாகிஸ்தான், இலங்கை இங்கு டெஸ்ட் போட்டி விளையாடிய பின்னர், இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் முக்கியமான போட்டி இதுவேயாகும்.

எத்தனை மணிக்கு போட்டி தொடங்குகிறது?

சர்வதேச நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கும்.

எந்த டிவி சேனலில் இந்தப் போட்டியை பார்க்க முடியும்?

DSport. (ஜெர்க் ஆகாதீங்க! சமீபத்தில் நடந்து முடிந்த நம்ம தினேஷ் கார்த்திக் கப் வாங்கிக் கொடுத்த முத்தரப்பு தொடரை ஒளிபரப்பிய அதே DSport சேனல் தான். ஓவர் முடிவதற்குள்ளாகவே விளம்பரம் போட்டால் நாம் பொறுப்பல்ல!).

இன்டர்நெட்டில் பார்க்க முடியுமா?

முடியும். ஜியோ டிவி-ல் இப்போட்டியை காணலாம்.

பிஎஸ்எல்-ன் முதலாம் ஆண்டு சாம்பியனும், இரண்டாம் ஆண்டு சாம்பியனும் 2018-ன் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக நாளை மோதுகின்றன.

Peshawar Zalmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: