டோனியின் கடைசி நேர அதிரடியால் புனே சூப்பர் ஜெயிண்ட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎஸ் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ப்ளே ஆப் சுற்றின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு இடங்களைப் படித்த மும்பை, புனே அணிகள் மோதின. இந்த ஐபிஎல் போட்டியில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இரண்டு போட்டியிலும் புனே அணியே வெற்றி பெற்றது.
டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி, புனே அணியை பேட் செய்ய பணித்தது. புனே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் பத்து ரன்களை எடுக்கும் முன்பே புனே அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. மனோஜ் திவாரி 58, ரஹானே 56 ரன்கள் எடுத்து அணியை கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். டோனி அதிரடியாக ஆடி40 ரன்களை குவித்தார். மும்பை அணிக்கு 163 ரன்களை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பார்திவ் பட்டேல் அதிரடியாக ஆடி 52 ரன்களை குவித்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. சிம்மென்ஸ் ரன் அவுட்டாகி வெளியேறினார். வாசிங்க்டன் சுந்தர் பந்தில் ரோஹித் சர்மா, பொலார்ட், அம்பிர்தா ராயுடு அவுட்டாக, மும்பை அணி தோல்வியை நோக்கி பயணப்பட ஆரம்பித்தது. பாண்டியா சகோதரர்கள் முயற்சி எந்த பலனும் கொடுக்கவில்லை.
இருபது ஓவர் முடிவில் மும்பை அணி 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் புனே ஜெயிண்ட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. புனே அணில் விளையாடிய டோனிக்கு இது 7வது பைனலில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று புனே அணியின் கேப்டன் சுமித் தெரிவித்தார்.