Advertisment

புரோ கபடி லீக் : புனேரி பால்டன், தபாங் டெல்லி அணிகள் வெற்றி

புரோ கபடியில் இன்று இரவு 8 மணிக்கு புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
Puneri Paltan vs Bengal Warriors and Telugu Titans vs Dabang Delhi KC Tamil News

புரோ கபடி லீக் 2023: புனேரி பால்டன் vs பெங்கால் வாரியர்ஸ்; தெலுங்கு டைட்டன்ஸ் vs தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்

pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

புனேரி பல்டன் vs பெங்கால் வாரியர்ஸ்

நடப்பு பி.கே.எல் சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் 2 வெற்றியும், ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ள புனேரி பல்டன் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதேசமயம் மூன்றில் வெற்றி, 1 ஆட்டம் டை என பெங்கால் வாரியர்ஸ் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

பி.கே.எல் வரலாற்றில் புனேரி பல்டான் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் 18 முறை மோதியுள்ளன. இதில் பெங்கால் வாரியர்ஸ் 8 முறை வெற்றி பெற்றுள்ளது. புனேரி பல்டன் 9 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில், புனேரி பல்டான் அணி 49-19 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. புனேரி அணி தரப்பில்,கொயாட் 12 புள்ளிகளும், இனாம்தர் 10 புள்ளிகளும் எடுத்தனர். பெங்கால் வாரியர்ஸ் அணி தரப்பில்,மணிந்தர்சிங் 7 புள்ளிகள் எடுத்தார்.

தெலுங்கு டைட்டன்ஸ் vs தபாங் டெல்லி கே.சி.

பவன் செராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் இதுவரை விளையாடி 4 போட்டிகளும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மறுபுறம், தபாங் டெல்லி கே.சி. 1 வெற்றி மற்றும் இரண்டில் தோல்வியடைந்து  6 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. 

பி.கே.எல் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. தபாங் டெல்லி கே.சி.க்கு எதிராக 8 வெற்றிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் முன்னிலையில் உள்ளது. தபாங் டெல்லி கே.சி. 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 1 போட்டி டையில் முடிந்தது. 

தொடர்ந்து இன்று நடந்த போட்டியில், தபாங் டெல்லி 51-40 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.டெல்லி அணி தரப்பில் மாலிக், 16 புள்ளிகளும், நவீன்குமார் 14 புள்ளிகளும் பெற்றனர். டைட்டன்ஸ் அணி தரப்பில் பவன் 14 புள்ளிகள் எடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment