கடைசி கட்டத்தில் நிகழ்ந்த ஆல் அவுட்… போராடி வெளியேறிய தமிழ் தலைவாஸ்!

முதல் ஆல் அவுட் வந்தபோது, ​​தமிழ் தலைவாஸ் அணி 15-11 என்று முன்னிலையில் முன்னேறி இருந்தனர்.

Puneri Paltan vs Tamil Thalaivas, Semifinal 2, Thalaivas fight till end of match Tamil News
puneri paltan vs tamil thalaivas; Puneri Paltan book their spot in the mega-final against theJaipur Pink Panthers Tamil News

Puneri Paltan 39-37 Tamil Thalaivas, 2nd Semi-final 2022, Match HIGHLIGHTS Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழ் தலைவாசுக்கு சிறப்பான தொடக்கம்

இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் முதலில் ரெயிடு பாடி செல்வதாக அறிவித்தது. அதன்படி, ரெயிடில் கலக்கி வந்த தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்த புள்ளிகளை எடுத்து வந்தது. முக்கியமான ரெயிடாக நரேந்தரின் ரெயிடு இருந்தது. இரண்டு வீரர்கள் இடையே சிக்கிக்கொண்ட அவர் ஒரு டும்க்கி போட்டு கோட்டைத் தொட்டார்.

மறுபுறம், புனேரி பால்டனும் அந்த அணியின் பங்கிற்கு ரெயிடில் மற்றும் போனஸ் புள்ளிகளை எடுத்தது. இதனால், ஆரம்ப தருணங்களில், இரு தரப்புக்கும் இடையே ஒரு நெருக்கமான ஆட்டத்தை நோக்கிச் சென்றது. ஆனால், தமிழ் தலைவாசின் டிஃபென்ஸ் விழித்துக்கொள்ளவே, கபடி பாடி வந்த புனேரி வீரர்கள் வளைத்து வளைத்து மடக்கப்பட்டனர். நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவார் இருவரும் அடுத்தடுத்த ரெயிடுகளில் சில புத்திசாலித்தனமான புள்ளிகளை எடுத்தனர்.

முன்னதாக ஆல் அவுட் ஆக இருந்ததைத் தாமதப்படுத்த புனேரி பல்டானுக்கு பல சூப்பர் டேக்கிள்கள் தேவைப்பட்டன. மேலும், முதல் ஆல் அவுட் வந்தபோது, ​​தமிழ் தலைவாஸ் அணி 15-11 என்று முன்னிலையில் முன்னேறினர். இப்போது, ஆட்டத்தை கட்டுப்படுத்தத் தொடங்கினர். பங்கஜ் மோஹிட்டை மடக்க முயன்ற சில அற்புதமான சோதனைகள் வீழ்ச்சியடைந்தாலும், சில சூப்பர் டேக்கிள்களைப் பெற்று ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்தனர்.

போராடி வெளியேறிய தமிழ் தலைவாஸ்

இப்போது முதல் பாதி முடிவுக்கு வந்த நிலையில் தமிழ் தலைவாஸ் 21-15 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் எப்படியாவது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்த புனேரி பல்டான் வேகத்தை மீண்டும் பெறுவதற்கு முன்கூட்டியே ஆல் அவுட் செய்ய தீர்மானித்தனர். அந்த கணத்தில் தமிழ் தலைவாசின் இரண்டு முன்னணி ரைடர்களை களத்தில் இல்லை. ஆட்டமிழந்து பெஞ்சில் இருந்தனர். இது வலுவான, நெகிழ்ச்சியான தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்ஸ் பிரிவுக்கு கடினமாக இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடு இறுதி பத்து நிமிடங்களில் இரண்டு புள்ளிகளை நீட்டிக்கவில்லை, இரு அணிகளும் தொடர்ந்து புள்ளிகளை மாறி மாறி எடுத்து வந்தனர். மோஹிட் ஆட்டத்தில் தனது 10 புள்ளிகளைப் பூர்த்தி செய்தார். ஐந்து நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் அணிகள் 30-30 என சமநிலையில் இருந்தன.

அந்த இறுதிக் கட்டத்தில்தான் பல்டான் கேப்டன் ஃபாஸல் அத்ராச்சலி, ரெயிடு வந்த அஜிங்க்யா பவாரை மடக்கி பிடித்தார். இப்போது தமிழ் தலைவாஸ் டிஃபென்சில் நெருக்கடியை அதிகம் உணர ஆரம்பித்தது. ஆட்டத்தில் இன்னும் மூன்று நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் 2வது முறையாக ஆல்-அவுட் ஆனாது. இதனால் ஆட்டத்தில் 36-30 என முன்னிலை பெற்றது புனேரி பால்டன். அவர்களின் கடைசி வரை கைவிடாத அந்த முன்னணி, ஆட்டத்தை சாமர்த்தியமாக முடிக்க உதவியது. இறுதியில், புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் போரடித் தோற்றது.

மீண்டும் ஒரு சிறப்பான கம்பேக் கொடுக்க தயார்

இந்த தோல்வியை ஜீரணிக்க சிறிது காலம் ஆகும் என்றாலும், தமிழ் தலைவாசின் போராட்டமும் இடைவிடாத முயற்சியும் விளையாடிட்டு உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரரின், காயம், பயிற்சியாளர் விலகல், சூப்பர் டிஃபென்ஸ் வீரர் விலகல் என லீக் சுற்றில் பல தடைகளை சந்தித்தது தமிழ் தலைவாஸ், எலிமினேட்டர் சுற்றில் டை-பிரேக்கர் வரை சென்று வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் டாப் 2 இடத்தை பிடித்த அணியின் பல்லை பதம் பார்த்தது. அவர்களுக்கும் தோல்வி பயத்தையும், ஒரு பெரிய போட்டியில் அழுத்தம் என்றால் என்ன? என்பதையும் காட்டியுள்ளனர்.

இந்த சீசனில் அரையிறுதி எனும் உச்சத்தை அடைந்த தமிழ் தலைவாஸ் அணியினர், அடுத்த ஆண்டில் நட்சத்திர வீரர் பவன் செஹ்ராவத் மற்றும் டிஃபெண்டர் சாகர் ரதி போன்ற அசாத்திய வீரர்களுடன் களமாடி இறுதிப்போட்டி எனும் கனவுச் சுற்றை அடைவர். ஏனென்றால், அவர்களுடன் பயிற்சியாளர் அஷன் குமார் என்ற மாபெரும் பலம் உள்ளார்.

நாளை சனிக்கிழமை (17-ம் தேதி) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Puneri paltan vs tamil thalaivas semifinal 2 thalaivas fight till end of match tamil news

Exit mobile version