Advertisment

தோல்வியே சந்திக்காத முன்னாள் உலக சாம்பியன்: அசராமல் ஆடி ஆட்டம் காண வைத்த பி.வி.சிந்து

அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் Ratchanok Intanon-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி மாஸ் காட்டியிருக்கிறார் சிந்து

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
PV Sindhu beats Ratchanok Intanon World Tour Finals - பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில் வெற்றி

PV Sindhu beats Ratchanok Intanon World Tour Finals - பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில் வெற்றி

பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது.

Advertisment

இதில், பி.வி.சிந்து ‘டெத் ஆஃப் குரூப்’ என அழைக்கப்படும் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தார். இதில், முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் ஸூ யிங், 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சி, அமெரிக்காவின் பெய்வென் ஹெங் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் சிந்து, இந்தத் தொடரில் தொடக்கம் முதலே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

முதல் போட்டியிலேயே, ஜப்பானின் அகானே யமகுச்சியை ஊதித் தள்ளிய சிந்து, தொடர்ந்து உலகின் நம்பர்.1 வீராங்கனையான சீன தைபேயின் Tai Tzu Ying-கை பரபரப்பான இறுதிச் சுற்றில் வீழ்த்தி, தனது கேரியரில் முதன்முறையாக அவரை வெற்றிக் கண்டார். அதற்கு முன்பு 7 முறை அவருடன் மோதிய போதும் சிந்து தோற்றிருந்தார்.

அதே ஆக்ரோஷத்துடன், இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் Ratchanok Intanon-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி மாஸ் காட்டியிருக்கிறார் சிந்து.

பேட்மிண்டன் ரசிகர்களுக்கு, இன்று நடந்த போட்டி செம விருந்து என்றே சொல்லலாம். ஏனெனில், Ratchanok இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்தவர். அவரை சிந்து அரையிறுதியில் சந்திப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலிவியது.

முதல் செட்டில், ஆரம்பம் முதலே Ratchanok-கின் Long Serves-களை அனாயசமாக கையாண்ட சிந்து, அவர் மீது அழுத்தத்தை உருவாக்கினார். 10-7 என சிந்து முன்னிலையில் இருந்த போது, சில புள்ளிகளை தவற விட, 14-14 என்று இருவரும் சமமான நிலையிலேயே சென்றுக் கொண்டிருந்தனர்.

நெட் அருகேயான ஷாட்ஸ்களை Ratchanok சாமர்த்தியமாக கையாண்டு, சிந்துவின் உடலை நோக்கியே பெரும்பாலும் அடித்தார். இருப்பினும், Errors of Judgement என்று சொல்வது போல், பந்தை கணிப்பதில் சில தவறுகள் செய்ததால், சிந்துவின் முன்னிலையை அவரால் தடுக்க முடியவில்லை.

publive-image

சிந்துவும், சில Return-களை அற்புதமாக டச் செய்ய, தவறான அசைவுகளால் Ratchanok அதனை தவறவிட்டு, புள்ளிகளை தாரை வார்த்தார். அதேசமயம், விர்ர்ர்ர்..... விர்ர்ர்ர் என்று காற்றை கிழித்துச் செல்லும் அபார ஷாட்களுக்கும் சிந்து பஞ்சம் வைக்கவில்லை. அவ்வப்போது சரமாரியாக கார்க் பறந்து கொண்டிருந்தது

இறுதியில், முதல் செட்டை 21-16 என்றும், இரண்டாவது செட்டை 25-23 என்றும் கைப்பற்றி, 53 நிமிடத்தில் ஆட்டத்தை முடித்து வைத்து சோகம் வழிய, Ratchanok Intanon-ஐ தாய்லாந்திற்கு அனுப்பி வைத்தார் சிந்து.

இந்த Ratchanok Intanon 2013-ல் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

P V Sindhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment