/tamil-ie/media/media_files/uploads/2017/10/z561.jpg)
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபெல் நடாலை வாழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்று(சனி) நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ரோஜர் ஃபெடரர், ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபெல் நடாலுடன் ஃபெடரர் மோதினார். ஃபெடரரும், நடாலும் நேருக்கு நேர் மோதுவது இது 38-வது முறையாகும். முதல் செட்டை ஃபெடரர் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் நடால் டஃப் பைட் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், 6-3 என்று அந்த செட்டையும் ஃபெடரர் கைப்பற்றி வெற்றிப் பெற்றார்.
இந்தாண்டு மட்டும் இப்போட்டியையும் சேர்த்து, நடாலை தொடர்ந்து 5 முறை வீழ்த்தியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர்.
More history made.@RogerFederer beats Rafa Nadal for the 5th consecutive time to win 27th Masters 1000 title!#SHRolexMasterspic.twitter.com/kfcFegJXxU
— Tennis TV (@TennisTV) 15 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.