/tamil-ie/media/media_files/uploads/2018/01/A43.jpg)
Dhoni's Instagram post goes viral
ரஜினிகாந்தும், கிரிக்கெட் வீரர் தோனியும் இன்று மாலை சந்திக்க இருப்பதாக வெளியான செய்தியை, ரஜினியின் பி.ஆர்.ஓ. மறுத்துள்ளார்.
இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது. சென்னை அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமக்கான பலம். அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு” என கூறினார்.
மேலும், “இரண்டு ஆண்டுகள் சென்னை அணி ஆடாவிட்டாலும், ரசிகர்களின் ஆதரவு கூடத்தான் செய்திருக்கிறது. சென்னை அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடாதது வருத்தம் அளித்தாலும், நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழிநடத்த உதவும். 18 முதல் 20 வீரர்களை அணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். அஸ்வினை அணியில் சேர்க்க முயல்வோம்” எனவும் தோனி தெரிவித்தார்.
இன்று மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில், தோனி அவரைச் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்தியை ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹமது மறுத்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ‘இன்று ரஜினி - தோனி சந்திப்பு உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
. News spreading abt #MSDhoni meeting #Superstarrajini today is untrue.. @v4umedia1
— RIAZ K AHMED (@RIAZtheboss) 19 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.