இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 20016-ம் ஆண்டு வரை செயல்பட்ட்டார். கடந்த முறை பயிற்சியாளர் தேர்வு நடத்தப்பட்டபோது, அனில் கும்ளே மற்றும் ரவி சாஸ்திரி இடையே போட்டி நிலவியது. இறுதியில் அனில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது கும்ளே பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு பதிலளித்தபோது: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நான் விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறேன் என்று கூறினார்.