மும்பையில் மூத்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூடிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்தும், அடுத்து இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இலங்கைக்கு எதிராக நவம்பர் 11-ஆம் தேதி நடக்கும் பயிற்சி போட்டிக்கான அணித் தேர்வு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இத்தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை டெஸ்ட் தொடரில், நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து உடனான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(C), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா(VC), கே எல் ராகுல், மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, முஹமத் சிராஜ்.
இலங்கை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(C), ஷிகர் தவான், முரளி விஜய், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், புஜாரா, ரஹானே(VC), ரிதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், முஹமத் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.
இலங்கைக்கு எதிரான போர்ட் பிரசிடன்ட் XI அணி விவரம்:
நமன் ஓஜா (C), சஞ்சு சாம்சன், ஜிவான்ஜோத் சிங், பி சந்தீப், தன்மே அகர்வால், அபிஷேக் குப்தா, ரோஹன் பிரேம், ஆகாஷ் பண்டாரி, ஜலஜ் சக்சேனா, சிவி மிலிந்த், அவேஷ் கான், சந்தீப் வாரியர், ரவி கிரண்.
இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்து ட்விட்டரில் அஷ்வின் நன்றி தெரிவித்துள்ளார்.