பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card

இந்தூரில் இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்த பஞ்சாப் அணி, கடந்த சில ஆட்டங்களில் தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடி, 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதேசமயம், 11 ஆட்டங்களில் ஆடி, நான்கில் மட்டும் வெற்றிப்பெற்றுள்ள பெங்களூரு அணிக்கும் இன்னும் கொஞ்நஞ்சம், பிளே ஆஃபிற்குள் நுழைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றபோதும், இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதனால், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் முடிந்தவரை அதிக ரன் ரேட்டுடன் பெங்களூரு வெற்றிப்பெற வேண்டியது அவசியம்.

இரு அணிகளும், தங்கள் அணியில் உள்ள இரு வீரர்களை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்கிறது. அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்,

லோகேஷ் கெயில் Vs ஏ பி டி கோலி

அவ்வளவு தான். இதில் எந்த பார்ட்னர்ஷிப் இன்று அசத்துகிறதோ, அந்த அணிக்கே வெற்றி.

இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

×Close
×Close