‘கோலியின் ஆர்.சி.பி வழியில் மந்தனாவின்…’: அடுத்தடுத்த 2 தோல்விக்கு மீம்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்

‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

RCB's twin losses in WPL 2023, hilarious memes in tamil
'Virat Kohli's legacy is now followed by Smriti Mandhana': RCB's twin losses in WPL 2023 trigger hilarious meme fest Tamil News

WPL 2023, RCB – Smriti Mandhana – Virat Kohli memes Tamil News: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 தொடரில், நேற்று இரவு நடந்த 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். எனினும், அடுத்தடுத்த விக்கெட்டுகள் இழப்பால் தடுமாறிய பெங்களூரு 18.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 155 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் எடுத்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணியில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 14.2 ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால் மும்பை அணி பெங்களூருவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை அணியில் அரைசதம் விளாசிய தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 77 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் நாயகியாக ஹேலி மேத்யூஸ் அறிவிக்கப்பட்டார். மும்பையிடம் தோல்வி கண்ட பெங்களூரு அணிக்கு இது 2வது தொடர் தோல்வியாகும். அந்த அணி அதன் தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

மீம்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-வின் பெண்கள் அணி அடுத்தடுத்த 2 தோல்வியை சந்தித்துள்ளதை தொடர்ந்து, ‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rcbs twin losses in wpl 2023 hilarious memes in tamil

Exit mobile version