Advertisment

'2 மாதம் பல் துலக்கக் கூட முடியல, தாங்க முடியாத வலி...': விபத்தில் இருந்து மீண்டது பற்றி மனம் திறந்த ரிஷப் பண்ட்

"விபத்து எனக்கு வாழ்க்கையை மாற்றிய அனுபவமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் எழுந்தபோது, ​​​​நான் உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை" என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rishabh Pant opened up about accident Tamil News

இந்த சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட் 13 போட்டிகளில் 155.40 ஸ்டிரைக் ரேட்டில் 446 ரன்களை எடுத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rishabh Pant: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில்  பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். அந்த கோர விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் இருந்த தடுப்பானில் கார் மோதிய விபத்தில் அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் ஏற்பட்டன.

Advertisment

ரிஷப் பண்ட்டுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அந்த தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்றார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: I couldn’t even brush my teeth for two months: Rishabh Pant

இதனையடுத்து, ரிஷப் பண்ட் அண்மையில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார். அவரது தலைமையிலான டெல்லி அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் பிளே  ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட் 13 போட்டிகளில் 155.40 ஸ்டிரைக் ரேட்டில் 446 ரன்களை எடுத்தார். 

இந்த நிலையில், ரிஷப் பண்ட் தனக்கு நிகழ்ந்த கோர விபத்தில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு தனக்குள் ஊடுருவிய "தாங்க முடியாத வலி" மற்றும் "பாதுகாப்பின்மை" பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தொகுத்து வழங்கிய "தவான் கரேங்கே" நிகழ்ச்சியில் ரிஷப் பண்ட் பேசுகையில், "காயத்திலிருந்து மீண்டு வரும்போது உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். ஏனென்றால் உங்களைச் சுற்றி எல்லா வகையான விஷயங்களையும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒரு தனிநபராக, உங்களுக்கு எது நல்லது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். 

விபத்து எனக்கு வாழ்க்கையை மாற்றிய அனுபவமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் எழுந்தபோது, ​​​​நான் உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்ற மிகவும் அன்பாக இருந்தார்.

இரண்டு மாதங்கள் பல் துலக்கக்கூட முடியவில்லை, ஆறு முதல் ஏழு மாதங்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டேன். சக்கர நாற்காலியில் மக்களை எதிர்கொள்வதைப் பற்றி நான் பதட்டமாக இருந்ததால் என்னால் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை.

இப்போது நான் கிரிக்கெட்டில் மீண்டும் வருகிறேன், அழுத்தத்தை விட அதிகமாக, நான் உற்சாகமாக இருக்கிறேன். இது இரண்டாவது வாழ்க்கை என்று நான் உணர்கிறேன், அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் பதட்டமாக இருக்கிறேன், ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rishabh Pant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment