scorecardresearch

சச்சின்- சேவாக் கலக்கல்: வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்திய லெஜண்ட்ஸ்

இருப்பினும், ஆட்டத்தின் வெற்றி தோல்வியை விட, ஏக்கம் நிறைந்த தருணங்களுக்காக இந்த போட்டி நமது நினைவில் நீண்ட நாள் நிற்கும்.

சச்சின்- சேவாக் கலக்கல்: வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்திய லெஜண்ட்ஸ்

சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டிங்கில் ஸ்டைலைக்  காட்டினார், வீரேந்தர் சேவாக் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு தள்ளினார், யாரும் எதிர்பார்க்காத யார்க்கரை ஜாகீர் கான் வீசினார், யுவராஜ் சிங் பேட்டிங்கில் எந்த சிரமம் தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிய  இந்திய அணியின் வர்ணனைகள் அல்ல இவைகள். நேற்று (மார்ச் 7)  நடைபெற்ற  இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் இடையிலான சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் அறிமுக  போட்டியில் நடந்த சில தருணங்கள்.

மிடுக்கான ரெட்ரோ பிளேஸர் உடைகளில், ஆட்டத்தின் இரு கேப்டன்களான டெண்டுல்கரும், பிரையன் லாராவும் டாஸ் செய்தனர். டெண்டுல்கர் முதலில் பந்து வீசவது என முடிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி சார்பாக களமிறங்கிய சிவ்நாராயின் சந்தர்பால், தனது பழைய பேட்டிங் ஸ்டைலிலே பந்தை எதிர் கொண்டார். அதை பார்க்கும் போது, நாம் எதேனும் டைம் டிராவல் செய்கிறோமோ?  என்றே தோன்றியது.

 

45 வயதான சந்தர்பால் எந்தவிதமான பதட்டத்தையும்  காட்டவில்லை…. ஏன் அதற்கான அறிகுறிகள் கூட அவரிடம் இல்லை.  ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 41 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இதுவே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தனிமனிதரின் அதிகபட்ச ரன்களாகும். சந்தர்பாலின் உதவியால், மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 8விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தன.  சந்தர்பால் முதல் 33 பந்துகளிலே 50 ரன்கள் கடந்து விட்டார். அப்போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருந்தது.

இந்தியாவின் பவுலிங்கை பொறுத்தவரை, ரிட்லி ஜேக்கப்ஸை வீழ்த்திய  ஜாகீர் கானின் ஆழாமான யார்க்கர் அனைவராலும் பேசப்பட்டது.

இந்திய லெஜண்ட்ஸ் பேட்டிங் : 

ரசிகர்களின் கர்ஜனைகளுக்கு மத்தியில், இந்திய அணியின் பிரதான ஜோடிகள் டெண்டுல்கர், சேவாக் தொடக்க ஆட்டக்காரர்களா களமிறங்கினர். மீண்டும் இவர்கள் ஒன்றாக எதிரணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.  உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், இவர்கள் களத்தில் இருக்கும் போதே இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சேவாக் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு (பெட்ரோ காலின்ஸ் வீசிய ) அனுப்பிய காட்சி  ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு அனுப்பியது.

 

 

சச்சின் 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் (ஏழு பவுண்டரிகள்), சேவாக் தந்து ஐம்பதாவது ரன்னை கடந்தார்.

இந்த டெல்லி டேர்டெவில்ஸ் தனது வழக்கமான பாணியில் பவுண்டரியுடன் போட்டியை முடித்தார். சேவாக் 57 பந்துகளில் 74 ரன்கள். இறுதிவரை  ஆட்டமிழக்கவில்லை. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது.

இருப்பினும், ஆட்டத்தின் வெற்றி தோல்வியை விட, ஏக்கம் நிறைந்த தருணங்களுக்காக இந்த போட்டி நமது நினைவில் நீண்ட நாள் நிற்கும். உதாரணமாக, வான்கடே மைதானத்தில் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு,  முதன்முறையாக இந்த போட்டியில் தான் ‘சச்சின்,சேவாக்’ ஜோடியை உலகம் கண்டு ரசித்தது.

 

 

டெண்டுல்கர் விளையாடிய சில ஷாட்களை பார்க்கும்பொழுது, அவர் கிரிக்கெட்டில் டச்சில் தான் இருக்கின்றார் என்பது போல் தோன்றியது.

போட்டிக்குப் பின் பேசிய சேவாக்,” ஆரம்பத்தில் ஒற்றை ரன்கள் எடுக்க வேண்டாம் என்று சச்சின் கூறியிருந்தார், ஆனால் போக போக விரைவான சிங்கிள் எடுக்கும் வகையில் பேட்செய்தார்; அது உங்களுக்கான சச்சின்” என்றார்

 

 

 

இரிதியாக களமிறங்கிய யுவராஜ் சிங், தனது வழக்கமான அதிரடியை வெளிபடுத்தினர். யுவராஜ் சிங் சிறிது நேரம் தான் களத்தில் இருந்தாலும், அவரின் பேட்டிங்கில் எந்த தடுமாற்றமும் இல்லை.

ஆட்டத்திற்கு பிறகு பேசிய டெண்டுல்கர் : “ 2013 க்குப் பிறகு இங்கு திரும்பி வருவது சிறப்பு. ரசிர்களின் சத்தம் ஆட்டத்தைத் தூண்டியது. நான் ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவர் விளையாடினேன், ஆனால் அங்கு விளையாடும்போது எல்லாவற்றையும் கடன் வாங்க வேண்டியிருந்தது”என்றார்.

“இந்த போட்டி நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது விழிப்புணர்வு பற்றியது. வாகனம் ஓட்டும் போது, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. இந்திய அணி விளையாடவில்லை என்றாலும், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்”என்று அவர் மேலும் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Road safety world series t20 2020 sachin sehwag wankhede

Best of Express