ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம் திடீர் தற்கொலை? போலீஸ் விசாரணை; ம.பி-யில் பரபரப்பு

Rohini Kalam international Jujitsu player Suicide: ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், ஜூஜிட்சு தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ரோகிணி கலாம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohini Kalam international Jujitsu player Suicide: ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், ஜூஜிட்சு தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ரோகிணி கலாம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Martin Jeyaraj
New Update
Rohini Kalam international Jujitsu player Suicide Tamil News

Jiu Jitsu player Rohini Kalam Suicide: போலீசாரின் முதற்கட்ட விசாரணைகள் ரோகிணி கலாம், தற்கொலை செய்து கொண்டதாகவும், இருப்பினும் எந்தக் குறிப்பும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றன.

Rohini Kalam Found Dead In MP Residence: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் நடந்த 8-வது ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், ஜூஜிட்சு தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ரோகிணி கலாம், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

28 வயதான அவர், வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது, தற்கொலை செய்து கொண்டதாகவும், ​​அவரது சகோதரி ரோஷ்னி வந்து பார்த்தபோது  தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணைகள் ரோகிணி கலாம், தற்கொலை செய்து கொண்டதாகவும், இருப்பினும் எந்தக் குறிப்பும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றன. 

ரோகிணி கலாமின் மரணத்திற்கு காரணம்  என்ன?

ரோகிணியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. ரோகிணி அஷ்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியாளராகப் பணிபுரிந்ததால் கணிசமான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது சகோதரி ரோஷினி என்.டி.டி.வி-யிடம் தெரிவித்துள்ளார். இது பற்றி ரோஷினி பேசுகையில், “என் அக்கா தன் வேலையைப் பற்றி கவலைப்பட்டார். அவருடைய பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அவரைத் தொந்தரவு செய்தனர். அவருடைய பள்ளியின் முதல்வர் அவரைத் தொந்தரவு செய்தார். இதை அக்கா தொலைபேசியில் பேசிய விதத்திலிருந்தே அதை என்னால் உணர முடிந்தது,” என்று கூறினார்.

ரோகிணி சனிக்கிழமை அஷ்டாவிலிருந்து தனது சொந்த ஊரான தேவாஸுக்குப் பயணம் செய்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் வழக்கமான தேநீர் மற்றும் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, தொலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு, தனது அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு சென்ற அவரது தாயும் சகோதரியும் திரும்பி வந்து பார்த்தபோது, ​​அவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். 

Advertisment
Advertisements

ரோகிணி பின்னணி 

ரோகிணி கலாம் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் பிறந்தார். அவர் தனது விளையாட்டுப் பயணத்தை 2007 இல் தொடங்கிய நிலையில், 2015 ஆம் ஆண்டில், ரோகிணி தனது தொழில்முறை ஜியு-ஜிட்சு வாழ்க்கையைத் தொடங்கினார். சமூகத் தடைகளைத் தாண்டி சர்வதேச அளவில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் உந்துதல் பெற்றார்.

சிறிது வருடங்களிலேயே, ஜியு-ஜிட்சுவில் இந்தியாவின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக அவர் ஆனார். மேலும், 48 கிலோவில் பல தேசிய சாம்பியன்ஷிப்களை வென்று சமூக அங்கீகாரத்தைப் பெற்றார். ரோகினி தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் 2022 இல் வெண்கலம் வென்றார், ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தடகள வீரர்களில் ஒருவரான ஹாங்சோ; ரோகிணி பெண்கள் -52 கிலோ பிரிவில் போட்டியிட்டார். இது அவரது கனவுகளைத் தொடர அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. பாலின சமத்துவம், தடகள அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை ஆதரிக்கும் தடகள ஆணையர் மற்றும் பயிற்சியாளராக ரோகினி விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான குரலாகவும் இருந்தார். 

ஐ.பி.எஸ் கனவு, விக்ரம் விருதை நோக்கிய பயணம்

ஓய்வுபெற்ற பேங்க் நோட் பிரஸ் ஊழியரான ரோகிணியின் தந்தை, தனது மகள் ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்ரம் விருதுக்காக பாடுபட்டு வருவதாகவும் என்.டி.டி.வி-யிடம் தெரிவித்தார். அவர் வேலையில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் இருந்ததாகவும், திருமண திட்டங்களையும் மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும், ரோகிணி ஐந்து மாதங்களுக்கு முன்பு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், உடல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து இன்னும் மீண்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுவும், வேலை தொடர்பான மன அழுத்தமும் சேர்ந்து, அவரது மன நலனைப் பாதித்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ரோகிணி மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: