Rohit Sharma - Shubman Gill Tamil News: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமாடிய கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி ரன் மழை பொழிந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியில் ரோகித் 101 ரன்களும், கில் 112 ரன்களும் எடுத்தனர்.
இந்த மிரட்டலான ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு 'டெட்லி ஓப்பனிங்' கம்போ இருவரும் உருவெடுத்துள்ளனர். இந்திய மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், இந்த ஜோடி கச்சிதமான பார்ட்னெர்ஷிப் அனைவராலும் மெச்சும்படியாதனாக உள்ளது. இவர்கள் இந்த போட்டியில் மட்டுமல்லாது, நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில், கவுகாத்தியில் 143,
திருவனந்தபுரத்தில் 95 மற்றும் கொல்கத்தாவில் 33 (இலங்கைக்கு எதிராக); ஐதராபாத்தில் 60, 72 ராய்பூரில் (நியூசிலாந்து எதிராக) என 615 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளனர். முன்பு, ரோகித் - தாவன் கூட்டணி தான் ஒருநாள் போட்டிகளில் மிரட்டல் ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது ரோகித் கில்லுடனும் இணைத்துள்ளது மேலும் வலுவான கூட்டணியை இந்தியா அமைத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் தனது 30வது ஒருநாள் சதத்தை விளாசினார். இதன் மூலம் 35 வயதான அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசி வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்க பாண்டிங் உடன் 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் 49 சதங்களுடன் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்திலும், 46 சதங்களுடன் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர். மறுபுறம், கில் தனது கடைசி 4 ஒருநாள் ஆட்டத்தில் 3வது ஒருநாள் சதத்தை விளாசி இருந்தார்.
தொடக்கம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கி அள்ள வேண்டும் என்ற நோக்கில் களமாடிய ரோகித் - கில் ஜோடி 10 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் எடுத்தனர். பிறகு 15 ஓவர்களில் 128 ரன்களும், 20 ஓவர்களில் 165 ரன்களும் குவித்தனர். இப்படியான ஒரு ஆட்டத்தை நாம் பெரும்பாலும் டி-20 போட்டிகளில் தான் காண முடியும். அத்தகைய ஆட்டத்தை இந்த ஜோடி நேற்று இந்தோரில் வெளிப்படுத்தியது. இதே மைதானத்தில் கடந்த 2011 டிசம்பர் 8 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் 219 குவித்து மிரட்டி இருந்தார். அவரின் ஆட்டத்தைப் போல, அங்கு குவிந்திருந்த 30, 000 ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர் ரோகித் - கில் ஜோடி. இவர்கள் தான் இனி ஒருநாள் போட்டியில் 'டெட்லி ஓப்பனிங்' கம்போ என்றால் நிச்சயம் மிகையாகாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.