இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த காரணங்களுக்காக விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதால் அவரை அணியில் இருந்து பிசிசிஐ விடுவித்துள்ளது. இதனால் ஒருநாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த காரணத்திற்காக விடுப்பு கேட்டிருந்த ஷிகர் தவான், மீண்டும் தற்போது அணியில் இணைந்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: Virat (Capt), Vijay, Rahul, Shikhar, Pujara, Rahane (vc) , Rohit, Saha (wk), Ashwin, Jadeja, Kuldeep, Shami, Umesh, Ishant, Vijay Shankar.
ஷிகர் தவான் இந்திய அணியில் இணைய உள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முரளி விஜய்க்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும், இடது, வலது காம்பினேஷன் எப்போதும் சிறந்தது என்பதால் தவானுடன், முரளி விஜய் அல்லது லோகேஷ் ராகுல் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: Rohit (capt), Shikhar, Ajinkya, Shreyas, Manish, Kedar, Dinesh, MS Dhoni (wk), Hardik, Axar, Kuldeep, Chahal, Bumrah, Bhuvneshwar, Sidharth Kaul
இதில், சித்தார்த் கவுல் அறிமுக வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் கவுல், முதன் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
2008-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அண்டர் 19 இந்திய அணியில் சித்தார்த் கவுல் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல்-ல் இதுவரை 21 ஆட்டங்களில் ஆடியுள்ள இவர் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எகானமி - 8.45.