'எ டெரிஃபிக் ஒன்டே அன்ட் டி20 பிளேயர்' என்றால், அது ரோஹித் ஷர்மா என்று சொல்லி விடலாம். என்ன ஒரு பெர்ஃபாமன்ஸ்! என்ன ஒரு ஸ்போர்ட்! விராட் கோலியை ஒரு கண்ணில் ரசித்தால், ரோஹித்தை மற்றொரு கண்ணில் செமயாக ரசிக்கலாம்.
நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி20 போட்டியில், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பெர்ஃபக்ஷனான ஆட்டம், எதிர்கால ஒயிட் பால் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கைட்.
ஒருநாள் அல்லது டி20 போட்டி நடக்கும் தினம், அவருக்கானதாக அமைந்துவிட்டால், அவரது பேட்டிங் டென்சிட்டி யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நேற்றைய ரோஹித்தின் ஸ்கோர்... லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, அந்த மைதானத்தின் Curator சொன்ன வார்த்தைகள் இது, "இந்த பிட்சில், இரு அணியும், 130 ரன்கள் அடிப்பதே பெரிது. அவ்வளவு கடினமான பேட்டிங் பிட்ச் இது" என்றார்.
அவர் சொன்னது போலவே தான், நேற்றைய பிட்சும் இருந்தது. இந்தியாவின் ரன் ரேட் 8 என்கிற விகிதத்தில் தான் முதல் பத்து ஓவர்களுக்கு இருந்தது. பந்து சரியாக மேலெழும்பி பேட்டிற்கு வரவில்லை. இப்படியொரு டஃப்பான பிட்சில் தான், 61 பந்தில் 111 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்தார் 'ஹிட்மேன் ரோஹித்'. Curator கணித்த ஒரு அணியின் ஸ்கோரை கிட்டத்தட்ட மேட்ச் செய்து விட்டார்.
நேற்றைய ஆட்டத்தின் மூலம், சில சாதனைகளையும் ரோஹித் வசப்படுத்தியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம்:
கெயில் / கப்தில் - 103 சிக்ஸர்கள்
ரோஹித் ஷர்மா - 92
பிரண்டன் மெக்குல்லம் - 91
காலின் மன்ரோ / ஷேன் வாட்சன் - 83
டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் முதலிடம்:
ரோஹித் ஷர்மா - 19
விராட் கோலி - 18
மார்டின் கப்தில் - 16
மெக்குல்லம் / கெயில் - 15
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அதிக சதம் அடித்தவர்கள்:
ஒருநாள் போட்டி - சச்சின் டெண்டுல்கர் - 49 சதம்
டெஸ்ட் போட்டி - சச்சின் டெண்டுல்கர் - 51 சதம்
டி20 போட்டி - ரோஹித் ஷர்மா- 4 சதம்
ரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா. அதன் பிறகு 'Blow and Blast' என்பதே அவரது பாணி.
இந்த இறுதி பாணியில் ரோஹித்திடம் சிக்கி சீரழிந்த பவுலர்கள் பலர்.. இந்திய பேட்ஸ்மேன்களில் சச்சின் காலத்திற்கு பிறகு தோனி மட்டுமே இந்த உத்தியில் ஆடி வந்தார். அவருமே, கேப்டன் என்ற பொறுப்புக்கு வந்த பிறகு, ஒருநாள் போட்டி என்றால், 47வது ஓவருக்கு பிறகு தான் அடிக்கவே ஆரம்பிப்பார்.
ஆனால், ரோஹித் பேட்ஸ்மேனாகவும் சரி... கேப்டனாகவும் சரி.. அவரது கீன் டார்கெட் அந்த லாஸ்ட் டென் ஓவர்ஸ் தான். டி20 போட்டிகளில் 4 சதம் அடிப்பது என்பதெல்லாம், ஜஸ்ட் லைக் தட் விஷயம் அல்ல. இதுவே, ரோஹித் எவ்வளவு தரம் வாய்ந்த வீரர் என்பதற்கு உதாரணம்.
சமீபத்தில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த பிறகு, சச்சினா - கோலியா என்ற விவாதம் அனல் பறந்தது. கோலியை சச்சினுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமோ, அந்த அளவிற்கு முட்டாள்த்தனம் கோலியை, ரோஹித்துடன் ஒப்பிடாதது.
ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில், இன்றைய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் விராட் கோலிக்கு சவால் அளிக்கக் கூடிய ஒரே வீரர் ரோஹித் ஷர்மா மட்டும் தான்.